Andrea Jeremiah: ‘ஹீரோவுடன் ‘கிவ் அன் டேக்’ வேண்டும்’ -ஆண்ட்ரியா ஓப்பன் டாக்!
Andrea Jeremiah About the relationship with the heroes: எப்போதுமே நடிகையாக ஒரு வேலை பார்க்கும் போது, ஒரு ‘கிவ் அன் டேக்’ இருந்தால் தான் ஹீரோ உடன் கெமிஸ்ட்ரி வேலை செய்யும்.
ஆண்ட்ரியா, பாடகியாக, நடிகையாக, டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பல ரூபங்களில் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆண்ட்ரியா மாதிரியான ஆல் ரவுண்டர்கள் சினிமாவின் கட்டாயம். கதையின் நாயகியாக மாறி வரும் ஆண்ட்ரியாவின் சமீபத்திய படம் அனல்மேலே பனித்துளி. இந்த படம் தொடர்பாக இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஆண்ட்ரியா கூறியவை இதோ:
‘நான் பிறப்பால் ஒரு ஆங்கிலோ இந்தியன். அதனால் எனக்கு அந்த மாதிரி ஃபீல் எதுவும் இல்லை. ஆண்ட்ரியாவா எனக்கு எந்த ஃபீலும். மானம் என்பது நான் போடும் ஆடையில் இல்லை, நான் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கு. என் படத்தில் எனக்கு இந்த டயலாக் இருக்கு.
எப்போதுமே நடிகையாக ஒரு வேலை பார்க்கும் போது, ஒரு ‘கிவ் அன் டேக்’ இருந்தால் தான் ஹீரோ உடன் கெமிஸ்ட்ரி வேலை செய்யும். அப்போது சீனில் ஒரு மேஜிக் வரும்.
சிலர் கமர்ஷியல் படம் எடுக்க வேண்டும், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம் எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் அர்த்தமுள்ள படங்களை எடுக்க நினைப்பார்கள். ஆனால் வெற்றி மாறன் கலை நயமுள்ள படம் எடுக்கிறார், வெற்றி பெறும் படம் எடுக்கிறார், விருது வாங்கும் படம் எடுக்கிறார். ஒரே படத்தில் இந்த எல்லாவற்றையும் செய்கிறார்.
அது நிறைய பேரால் செய்ய முடியாது. அது ரொம்ப கஷ்டம். அவரோட ஐடியாலஜி, ஆர்வம், நடை எல்லாம் வேறு மாதிரி இருக்கும். அவர் ரொம்ப நல்ல மனுசன். அனல் மேலே பனித்துளி படத்தின் கதை கேட்டுவிட்டு, எல்லா தயாரிப்பாளர்களும் பணம் போட மாட்டார்கள். ஆனால், வெற்றி மாறன் அந்த கதை மீது நம்பிக்கை வைத்து பணம் போட்டார். அது தான் அவர்’’
என்று அந்த பேட்டியில் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்