தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amudhavum Annalakshmiyum: தேர்தலில் நடக்க போவது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum: தேர்தலில் நடக்க போவது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 10, 2023 11:13 AM IST

அமுதா பதவிக்கு வந்தா இப்ப இருக்குற நிலைமையை விட பள்ளிக் கூடம் கீழ தான் போகும் என பழனி சொல்ல, அமுதா, அன்னம் அவனை முறைத்து பார்க்கின்றனர்.

அமுதாவும் அன்னலட்சுமியும்
அமுதாவும் அன்னலட்சுமியும்

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்றைய எபிசோடில் உமாவும் பழனியும் திட்டம் போட்டு கோவிலுக்கு வந்த செல்வா மற்றும் புவனாவை கடத்தினர். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

அனைவரும் பள்ளிக்கு ஓவ்வொருவராக வந்து கொண்டிருக்க அமுதா மற்றும் உமா என இருவரும் ஓட்டு சேகரித்து கொண்டு இந்த தேர்தலில் ஜெயிக்க போவது யார் என்பதை பார்க்கலாம் என ஒருவருக்கொருவர் சவால் விடுகின்றனர்.

இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் என்ன என்பது அறிவிக்கப்படுகிறது. பழனி அனைவர் முன்பும் நின்று பள்ளிக் கூடத்தை உலகதரத்துக்கு கொண்டு வருவேன்.. பிள்ளைகள் படிக்கிறதுக்கு பெத்தவங்க செலவு பண்ணித்தான் ஆகனும் என சொல்கிறான்.

அதன் பிறகு அமுதா பதவிக்கு வந்தா இப்ப இருக்குற நிலைமையை விட பள்ளிக் கூடம் கீழ தான் போகும் என பழனி சொல்ல, அமுதா, அன்னம் அவனை முறைத்து பார்க்கின்றனர். மேலும் படிப்பறிவில்லாத அமுதா பதவிக்கு வந்தா பிள்ளைகளோட எதிர்காலம் என்ன ஆகும் என பழனி சொல்கிறான்.

இப்படியான நிலையில் பழனியின் பேச்சுக்கு அமுதா எப்படி பதிலடி கொடுக்க போகிறாள், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்