Amaran Box Office : கமல்ஹாசனில் இந்தியன் 2 படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. முதல் நாள் வசூல் வேட்டையில் மாஸ்!
சிவகார்த்திகேயன்,சாய் பல்லவி நடித்திருக்கும் அமரன் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 21 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 28 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம்தான் அமரன். முகுந்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார். இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
28 கோடி ரூபாய் வசூல்
தமிழ்நாட்டை தாண்டி டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் அமரன் படத்துக்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியிலும் ரசிகர்கள் இந்த படத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். அமரன் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 21 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 28 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
இந்தியன் 2 படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்
முன்னதாக விஜய் நடித்த கோட் திரைப்படம் தான் தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகபட்சமாக 38 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. கோட் இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் 20.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 15 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 3ஆவது இடத்தை பிடித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 முதல் நாளில் 13.50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
அமரன் கதை
மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் நுழைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது, அதற்காக அவர் வீட்டில் எப்படியான எதிர்ப்பை சந்தித்தார். இதற்கிடையே சிக்கி இருக்கும் அவரது காதல் என்ன ஆனது? ராணுவத்தில் அவர் எப்படியான சாகசங்களை செய்தார்? காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ் நிலை நிலவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் அமரன் படத்தின் கதை!
நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. அவரது மனைவி சாய் பல்லவியின் நடிப்பில் அவ்வளவு நிஜம். முகுந்த் மீது இந்து வைத்திருந்த அப்பழுக்கற்ற காதலை, ஆத்மார்த்தமான அன்பை, அவர் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் விதம் நடிப்பில் அவருக்கும் இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறது. இதர கதாபாத்திரங்ளும் உண்மைக்கு நெருக்கமாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருக்கின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்