Actor Thalaivasal Vijay: இயல்பான நடிப்பு.. ஏ.ஆர். விஜயகுமார் 'தலைவாசல்' விஜய் ஆக மாறியது எப்படி? - சுவாரஸ்ய பின்னணி இதோ!
Actor Thalaivasal Vijay: திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகர் தலைவாசல் விஜய் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
Actor Thalaivasal Vijay: தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு, நண்பன், அண்ணன், அப்பா என அனைத்து துணை கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர் ஏ.ஆர். விஜயகுமார்.
சீரியல், சீரிஸ் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முக கலைஞரான இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் சிறந்து துணை கதாப்பாத்திர மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இவருக்கு 2010ம் ஆண்டு மலையாளப் திரைப்படமான 'யுகபுருஷன்' திருப்பு முனையாக அமைந்தது. அந்தப்படத்தில் இவரது கதாபாத்திரமான நாராயண குரு நல்ல பெயரை இவருக்கு வாங்கிக்கொடுத்தது. திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
துணை கதாபாத்திரத்தின் பெருமை
ஒரு திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் முக்கியம்தான் இருப்பினும் அவர்களை மிகுதி படுத்தி காட்டுவது துணை கதாபாத்திரம் தான். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு படத்தின் நாயகன் மட்டும் முக்கியம் கிடையாது அந்த திரைப்படத்தில் நடிக்கும் அனைத்து துணை கதாபாத்திரங்களும் செம்மையாக தங்களது வேலைகளை செய்தால் மட்டுமே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
கதாநாயகன் நாயகி போலவே எத்தனையோ துணை கதாபாத்திரங்கள் இன்று வரை சிறப்பான தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு சில துணை கதாபாத்திரங்கள் இன்று வரை தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக இருந்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் தலைவாசல் விஜய்.
மறக்க முடியாத கதாபாத்திரங்கள்
நடிகர் தலைவாசல் விஜய் 'தேவர் மகன்' படத்தில் கமலின் சகோதரனாக நடித்திருப்பார். அந்தப்படத்தில் மதுவுக்கு அடிமையானவர் போன்ற தாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 'மகாநதி' படத்தில் தெருவோர கலைஞராக கலக்கியிருப்பார். 'மகளிர் மட்டும்' படத்தில் ரோகினியின் கணவராக இவர் நடித்திருப்பார். அந்தப்படத்திலும் ஒரு குடிகார கதாபாத்திரம்தான். 'காதல் கோட்டை' படத்தில் அஜித்தின் நண்பராக ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் ‘பன்னீர்’ என்கிற ஆட்டோ ஓட்டும் கேரக்டர், ஹீரோவுடன் கொண்டிருக்கும் நட்பிற்காக பல உதவிகளை எவ்வித நிபந்தனையும் இன்றி செய்யும் நல்ல கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சிறந்த துணை நடிகர்களில் ஒருவர் தலைவாசல் விஜய்
'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் அண்ணன் கதாபாத்திரம், 'அமர்க்களம்' படத்தில் காதலியின் சகோதரன் என பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பார். இவருக்கு யுகபுருஷன் படத்துக்கு, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் கிடைத்தது. தற்போது வரை இவர் திரைத்துறையில் இருந்துவருகிறார்.
ஏ.ஆர். விஜயகுமார் 'தலைவாசல்' விஜய் ஆக மாறியது எப்படி?
தலைவாசல் விஜய், இவரது உண்மையான பெயர் ஏ.ஆர். விஜயகுமார். இவர் 1992 ஆம் ஆண்டு 'தலைவாசல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாதால், இதுவே அவரது பெயருக்கு முன்னாள் சேர்த்து இன்று வரை தலைவாசல் விஜய் என்றே அழைக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்