தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: அஜர்பைஜானில் மோதலா? அஜித்திற்கு ஆபத்தா? - விடாமுயற்சியின் நிலை? - உண்மை என்ன?

VidaaMuyarchi: அஜர்பைஜானில் மோதலா? அஜித்திற்கு ஆபத்தா? - விடாமுயற்சியின் நிலை? - உண்மை என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Oct 04, 2023 12:20 PM IST

அஜர்பைஜான் தலைநகர் பக்கூ கிழக்கு பக்கம் இருக்கிறது. மோதலானது வடக்கு நாகோர்னோ-காராபாக் பகுதியில் நடைபெற்றது.

விடாமுயற்சி
விடாமுயற்சி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில் தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 ஆவது படத்தில் இயக்குநராக கமிட் செய்யப்பட்டார்.

இந்த அறிவிப்பு நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியானது. ஆனால், அதன் பின்னர் பெரிதாக எந்த அப்டேட்டும் வெளியாக வில்லை. இதனிடையே, அஜித்தும் தன்னுடைய பைக் பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்த, விடாமுயற்சி படம் குறித்தான எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்தப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கமிட் செய்யப்பட்டார். கூடவே, வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கமிட் செய்யப்பட்டது சமூகவலைதளங்களில் வெளியான போட்டோ மூலம் உறுதியானது. மற்றொரு கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அந்தக் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இன்றைய தினம் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அபிதாபி, துபாய் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். இதில் விசுவாசம் போன்ற எமோஷனாலான பக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு தகவலாக, அங்கு மோதல் நடைபெற்று வருவதாகவும், இந்த நேரத்தில் அங்கு ஷூட்டிங் செய்வது சரியாக இருக்குமா? என்றும் கேள்வி வந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல ட்ரேடரான ரமேஷ் பாலா, “அஜர்பைஜான் தலைநகர் பக்கூ கிழக்கு பக்கம் இருக்கிறது. மோதலானது வடக்கு நாகோர்னோ-காராபாக் பகுதியில் நடைபெற்றது. 100,000 ஆர்மேனியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அஜர்பைஜான் பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஆகையால் பிரச்சினை இல்லை” என்று பதிவிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்