தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aditi Gave A Clear Answer About Love Rumours With Siddarth

Aditi Rao : சித்தார்த் -அதிதி ராவ் காதல்?.. பளீச் பதில் கொடுத்த அதிதி!

Divya Sekar HT Tamil
Mar 05, 2023 12:32 PM IST

நடிகர் சித்தார்த் -நடிகை அதிதி ராவ் காதலிப்பதாக பரவும் செய்திகள் குறித்து நடிகை அதிதி ராவ் பதில் அளித்துள்ளார்.

சித்தார்த் -அதிதி ராவ் காதல்
சித்தார்த் -அதிதி ராவ் காதல்

ட்ரெண்டிங் செய்திகள்

மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பாலிவுட் நடிகர் சத்யதேவ் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில், சித்தார்த், நடிகை அதிதிராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்

இதனிடையே இவர்கள் காதலிப்பதாக தகவல் பரவிவரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சித்தார்த் கடந்த கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடிகை அதிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுடைய இதய இளவரசியே’ என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், அண்மையில் பிரபலம் ஒன்றின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்ற சித்தார்த் அதிதியின் புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் அதிதியின் வீட்டில் எனிமி படத்தில் இடம் பெற்று இருக்கும், டும் டும் பாடலுக்கு சித்தார்த்-அதிதி இணைந்து நடனமாடி உள்ளனர்.

சித்தார்த்துடன் அவர் ஆடிய இந்த நடன வீடியோவை அதிதி பகிர்ந்து உள்ளார்.இதுவும் இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், சித்தார்த் மீது காதல் இல்லை என அதிதி ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது படங்களில், நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகின்றேன்.மக்கள் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். அவர்களை பேசாதீர்கள் என்று நம்மால் தடுக்க முடியாது.மக்கள் ஆர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். நான் எனக்கு பிடித்தவற்றில் கவனமாக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்தார்த், கடந்த 2007 ஆம் ஆண்டு அவரை விவாரகத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்