Vadivukkarasi: “காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை.. பல்ல கருப்பாக்க கரித்தூள்.. “முதல் மரியாதை” அவஸ்தைகள் -வடிவுக்கரசி!-actress vadivukkarasi latest interview about the problems that arose when sivaji played ganesan wife muthal mariyathai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadivukkarasi: “காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை.. பல்ல கருப்பாக்க கரித்தூள்.. “முதல் மரியாதை” அவஸ்தைகள் -வடிவுக்கரசி!

Vadivukkarasi: “காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை.. பல்ல கருப்பாக்க கரித்தூள்.. “முதல் மரியாதை” அவஸ்தைகள் -வடிவுக்கரசி!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 01, 2024 10:53 AM IST

Vadivukkarasi: பசையைஎன்னுடைய காதில் வைத்து, காதை மடக்கி, பஞ்சர் ஒட்டுவதற்கு ஒட்டப்படும் சொல்யூஷனை வைத்து அதில் ஒட்டினார். அதில் காது அப்படியே மூடிக்கொண்டது. அதை சுற்றி பாம்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. - வடிவுக்கரசி!

Vadivukkarasi: “காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை.. பல்ல கருப்பாக்க கரித்தூள்..  “முதல் மரியாதை” அவஸ்தைகள் -வடிவுக்கரசி!
Vadivukkarasi: “காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை.. பல்ல கருப்பாக்க கரித்தூள்.. “முதல் மரியாதை” அவஸ்தைகள் -வடிவுக்கரசி!

சிவாஜி மனைவி கேரக்டர்

இது குறித்து அவர் பேசும் போது, “பாரதிராஜா சார் ஒரு நாள் என்னை அழைத்து, ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் அது வயதான கதாபாத்திரம் என்றும் கூறினார். சிவாஜி சாரின் மனைவி கேரக்டர் என்றால் வேண்டாம் என்று சொல்வோமா? என்ன? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

 

முதல் மரியாதை!
முதல் மரியாதை!

படப்பிடிப்பில் மேக்கப் போடுவதற்காக இரத்த கையெழுத்து ராஜேந்திரன் என்பவர் வந்தார். அவர் முதலில் என்னுடைய காதை மடக்கி வைப்பதற்காக, ஒரு சின்ன ஸ்பாஞ்சை எடுத்து, அதை கட் செய்து நீளமாக்கினார். அதை என்னுடைய காதில் வைத்து, காதை மடக்கி, பஞ்சர் ஒட்டுவதற்கு ஒட்டப்படும் சொல்யூஷனை வைத்து அதில் ஒட்டினார். அதில் காது அப்படியே மூடிக்கொண்டது. அதை சுற்றி பாம்படம் தொங்க விடப்பட்டு இருந்தது.

கரித்தூளை தேய்த்து விட்டார்கள்

பல் அனைத்தையும் கருப்பாக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதால், அயர்ன் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கரியை எடுத்து தூளாக்கிக் கொண்டார். படப்பிடிப்பில் மேக்கப் செய்வதற்கு என்று பசை ஒன்று இருக்கும். அதை கையில் எடுத்த அவர் என்னுடைய வாயை திறக்க வைத்து, பல்லில் தேய்த்தார். அதற்கு மேலே இந்த தூளாக்கிய கரியை எடுத்து தேய்த்தார். அதன் காரணமாக என்னால் ஒன்றுமே சாப்பிட முடியவில்லை. அதனை தொடர்ந்து என்னுடைய தலைக்கு விக் வைத்தார்கள்.

 

வடிவுக்கரசி கேரக்டர்
வடிவுக்கரசி கேரக்டர்

அப்படித்தான் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டது. அந்த மேக்கப்பை போடுவதற்கு அரை மணி நேரம் ஆகிறது என்றால், அதை நீக்குவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும் கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஷெட்யூல். அந்த பத்து நாட்களும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அப்படி அவஸ்தை பட்டேன். எங்களுடைய டைரக்டர் எப்படி என்றால், ஷூட்டிங் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, எல்லா நடிகர்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

அதனால் எனக்கு ஷூட்டிங் இருக்கிறதோ இல்லையோ, தினமும் மேக்கப் போட்டுக் கொண்டு நான் ஷூட்டிங்கில் ஏதாவது ஒரு மரத்தடியில் படுத்து இருப்பேன். டைரக்டர், வடிவை கூப்பிடு என்று சொன்னால் நான் உடனே எழுந்து வருவேன். ஒரு கட்டத்தில் மேக்கப்பை நீக்கும் போது, தயவு செய்து நீக்க வேண்டாம் நான் குளிக்கும் போது கூட காதை ஸ்டிக் வைத்து சமாளித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். காரணம் அதை கழட்டி மாற்றுவது அவ்வளவு கடினமான ஒன்று. இவ்வளவு கஷ்டப்பட்டு நான் அதில் நடித்தேன்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.