புஷ்பா 2 பாடலுக்கு ஸ்ரீலீலா வாங்கும் சம்பளம் இவ்வளவுவா? வாயை பிளக்கும் டோலிவுட்!
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆட வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் ஐட்டம் பாடலில் ஸ்ரீலா ஆட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இது குறித்தான அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரின் நடன புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வருகிறது. ஆனால் ஸ்ரீலா தனது கேரியரின் முதல் ஐட்டம் பாடலில் நடனமாட எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த 'புஷ்பா' படத்தில் 'ஓஓ ஆண்டவா ஊஹு ஆண்டவா' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலில் சமந்தா யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இதனையடுத்து இயக்குனர் 'புஷ்பா 2' படத்திலும் ஐட்டம் பாடலுக்கு சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் சுகுமார். இந்தப் பாடலுக்கு ஒரு நட்சத்திர நடிகையுடன் நடனமாட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட படக்குழு, பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஹீரோயின்களை பரிசீலித்து, இறுதியாக நடிகை ஸ்ரீலீலாவை இறுதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.
அற்புதமான நடனக் கலைஞராகவும், எக்ஸ்பிரஷன் ராணியாகவும் பெயர் பெற்ற ஸ்ரீலீலா புஷ்பா 2’ படத்தின் ஐட்டம் பாடலுக்கு சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் கொடுப்பார் என ரசிகர்கள் எதிபார்த்து உள்ளனர். முன்னதாக அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடும் சில படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் அவை 'புஷ்பா 2' படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
