மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரேவதி! தமிழில் இது தான் பர்ஸ்ட்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில் மோகன் மற்றும் கார்த்தி உடன் அவர்கள் இருவருக்கும் இணையாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் இவரது நடிப்பு பலர் விரும்பும் வண்ணம் இருந்தது.
தமிழ் திரையுலகின் பொற்காலம் என்றால் 80 களை சொல்வதுண்டு. பாரதிராஜா, பாலச்சந்தர் என பெரும் இயக்குநர்கள் கொடிகட்டி பறந்த காலம் அது. அந்த சமயத்தில் திரையுலகிற்கு அறிமுகமான பல நடிகர்கள் தற்போது புகழின் உச்சியில் உள்ளனர். அதில் குறிப்பிடப்பட வேண்டிய நடிகை தான் ரேவதி, இவரது அபார நடிப்பால் இன்று வரை தமிழ் சினிமாவில் அவரது இருப்பை தக்க வைத்து வருகிறார்.
இவர் முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன் நடித்து வெளியான மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புதுமை பெண், வைதேகி காத்திருந்தாள் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இயல்பான முகம், குழந்தை தனமான பேச்சு என ரசிகர்களின் மனதை மயக்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி என பல இந்திய மொழிகளில் தன் கால் தடத்தை பதித்தார். இவர் நடித்த தேவர் மகன் திரைபடத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில் மோகன் மற்றும் கார்த்தி உடன் அவர்கள் இருவருக்கும் இணையாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் இவரது நடிப்பு பலர் விரும்பும் வண்ணம் இருந்தது.
இயக்குநர் ரேவதி
ரேவதி முதன் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகம் ஆகினார். ஆங்கிலத்தில் 'மிதிர் மை ஃப்ரண்ட்' என்ற படமே இவரது முதல் படமாகும். இப்படம் சிறந்த ஆங்கில படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களையும் டைரக்டு செய்தார்.
தற்பொழுது தமிழில் ஒரு வெப் சீரிசை இயக்குகிறார். மேலும், இந்த வெப் சீரிஸ் பிரபல ஓ.டி.டி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் இணை இயக்குனராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளதாகவும் அவரது இன்ஸ்டா பக்கதில் பதிவிட்டுள்ளார்.
இவரது இன்ஸ்டாவில், “ஹாட்ஸ்டாருக்கான தமிழ் தொடர் வாயிலாக மீண்டும் இயக்குநராக வருவதில் மிக்க மகிழ்ச்சி! இந்த சீரிஸில் சித்தார்த் ராமசாமி இணை இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் உள்ளார். அக்டோபர் 5-ம் தேதி முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குனரின் ஆற்றல் வித்தியாசமானது..எனக்குப் பிடித்திருக்கிறது!” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ரேவதிக்கு 58 வயதாகிறது. இந்த வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் இயக்கிய படங்கள் மிகவும் சிறப்பான படங்களாக வந்திருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பல மொழிகளில் இயக்கிய ரேவதியின் இயக்குனராக தமிழில் இதுவே முதல் படமாகும். இந்த வெப் சீரிஸ் வாயிலாக ரேவதியின் இயக்குநர் பரிமாணத்தையும் காண உள்ளனர். இவரது பதிவிற்கு பல திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரேவதியுடன் இணைந்து பணியாற்றும் சித்தார்த் ராமசாமி தமிழ் திரையுலகில் நன்கு அறியபட்ட புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் ஃபால் என்ற வெப் சீரிசையும் இயக்கியுள்ளார், இதில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படைப்பை பொறுத்திருந்து காணலாம்.
டாபிக்ஸ்