தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pooja Hegde: பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Pooja Hegde: பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Aarthi V HT Tamil
Sep 25, 2023 11:50 AM IST

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது பூஜா ஹெக்டே பாலிவுட்டில் மிகவும் ஆக்டிவாக நடிக்க தயாராகி வருகிறார். அது மட்டுமில்லாமல் பல விளம்பரங்கள் மற்றும் பிற படங்களில் நடித்துள்ளார்.

பூஜா ஹெக்டே கடைசியாக சல்மான் கான் நடித்த கிசிகி பாய் கிசிகி ஜான் படத்தில் நடித்தார். இவரின் பெயர் நடிகர் சல்மான் கானுடன் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அந்த செய்திகளை பூஜா மறுத்துள்ளார். தற்போது மீண்டும் பூஜாவின் பெயர் கிசுகிசு நெடுவரிசைகளில் சிக்கி இருக்கிறது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, நட்சத்திர கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் கிரிக்கெட் வீரர் யார் என்ற விவரமோ, மற்ற தகவல்களோ வெளிவரவில்லை.

சமீபத்தில் பூஜா ஹெக்டே கிரிக்கெட் வீரருடன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்