கதவைத்தட்டி தேதி கேட்ட ரவிக்குமார்; ‘நட்புக்காக’ வாய்ப்பு என்னோடது.. அந்த பிரச்சினையாலதான் அது சிம்ரனுக்கு” - மந்த்ரா
‘நட்புக்காக’ படத்தின் ஹீரோயின் வாய்ப்பு தனக்கே முதலில் வந்ததாகவும், அந்தப்படத்தை பார்க்கும் போதெல்லாம் தனக்கு மனவருத்தம் ஏற்படும் என்றும் நடிகை மந்த்ரா பேசி இருக்கிறார்

கதவைத்தட்டி தேதி கேட்ட ரவிக்குமார்; ‘நட்புக்காக’ வாய்ப்பு என்னோடது.. அந்த பிரச்சினையாலதான் அது சிம்ரனுக்கு” - மந்த்ரா
90 களில், பிரபல கிளாமர் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழில் ‘பிரியம்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிச்சத்திற்கு வந்த இவர், தொடர்ந்து லவ் டுடே, ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் அறிமுகிமாகி அங்கும் பல திரைப்படங்களில் நடித்தவர், மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.