Ravikumar MP: எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாதா? - பகீர் கிளப்பும் ரவிக்குமார் எம்.பி!
- உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி எஸ்சி அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களை தமிழ்நாடு அரசு கீழிறக்கம் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி எஸ்சி அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களை தமிழ்நாடு அரசு கீழிறக்கம் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
(1 / 5)
இதுதொடர்பாக கடந்த 25.07.2023 அன்று விழுப்புரத்தில் அமைச்சர் கயல்விழியிடம் கொடுத்த மனுவை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
(2 / 5)
அவரது பதிவில், "பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை எதிர்த்து ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவைக் காரணமாகக் காட்டி எஸ்சி அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களைக் கீழிறக்கம் செய்கிறது தமிழ்நாடு அரசு.
(3 / 5)
இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப்போல சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டு இதே நாளில் மாண்புமிகு அமைச்சர் கயல்விழி அவர்களிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த அநீதி இதுவரை நிறுத்தப்படவில்லை.
(4 / 5)
விசிக சார்பில் தலைவர் எழுச்சித் தமிழரும் நானும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம்.
(5 / 5)
இப்போதுகூட வேளாண் துறையில் 39 துணை இயக்குநர்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அதில் 37 பேர் எஸ்சி வகுப்பினர் என்றும் அறிகிறேன். இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா?." என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மற்ற கேலரிக்கள்