Actress Manthra: ‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்; அய்யோ என்னா அழகு.. அவருக்காகத்தான் ‘வத்தலகுண்டு’.. - மந்த்ரா!-actress manthra latest interview about her crush on actor ajith kumar in rettai jadai vayasu movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Manthra: ‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்; அய்யோ என்னா அழகு.. அவருக்காகத்தான் ‘வத்தலகுண்டு’.. - மந்த்ரா!

Actress Manthra: ‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்; அய்யோ என்னா அழகு.. அவருக்காகத்தான் ‘வத்தலகுண்டு’.. - மந்த்ரா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 29, 2024 05:06 PM IST

Actress Manthra: ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் அஜித்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பார். - நடிகை மந்த்ரா!

Actress Manthra: ‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்; அய்யோ என்னா அழகு.. அவருக்காகத்தான் ‘வத்தலகுண்டு’.. - மந்த்ரா!
Actress Manthra: ‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்; அய்யோ என்னா அழகு.. அவருக்காகத்தான் ‘வத்தலகுண்டு’.. - மந்த்ரா!
மந்த்ரா
மந்த்ரா

அஜித்தை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்

இது குறித்து அவர் பேசும் போது, “ பொதுவாகவே நான் மிகவும் சைலன்ட் டைப். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடன், என்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேரும் எப்போதும் இருப்பார்கள். சீனை நடித்து முடித்துவிட்டு, அவர்களது பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடுவேன். ‘ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் அஜித்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பார்.

‘ஆசை’ படத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும். அஜித் அப்போது எவ்வளவு அழகாக இருந்தார் என்று... நான் அஜித்தை பார்த்துக் கொண்டே இருப்பதை ஒருமுறை அம்மா பார்த்து விட்டார். உடனே அவர் என்ன அஜித்தை பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார். இதையடுத்து நான் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்று சமாளித்து விட்டேன். அந்த இடத்தில் வேறு என்ன சொல்ல முடியும் சொல்லுங்கள்.

அஜித்தை மிகவும் பிடிக்கும்

அவரை எனக்கு மிக மிக பிடிக்கும். உண்மையில், அஜித்திடம் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். முதலில் என்னிடம் இதை சொல்லும் பொழுது, நானும் பெரிதாக நம்பவில்லை. நானும் அஜித்தும் விஜிபி பீச்சில் ‘தகதிமிதா’ பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தோம். அந்த பாடலில் மிகவும் பயங்கரமாக டான்ஸ் ஆட வேண்டும். ஆனால், அஜித்திற்கு அப்போது டான்ஸ் கொஞ்சம் கடினமானதாகவே இருந்தது. பாடலுக்கான லைட்டிங்கை தொழிலாளர்கள் செட் செய்து கொண்டிருக்கும் போது, அவர் மண்ணில் ஏதோ எழுதினார். அப்போது அவர் என்னிடம் ஏதோ சொன்னார்.

 

படத்தின் போஸ்டர்
படத்தின் போஸ்டர்

அதற்கு, நான் பயங்கரமாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதை என்னால் தற்போது ஞாபகப்படுத்த முடியவில்லை. உண்மையில் அவர் அவ்வளவு நகைச்சுவையான நபர் என்பது பெரும்பான்மையான நபர்களுக்கு தெரியாது. இப்போதும் அவர் அவருக்கு நெருக்கமான நபர்களிடம் மிகவும் நகைச்சுவை உணர்வோடுதான் இருக்கிறார். ஆனால், அது யார் யார் என்பது எனக்கு தெரியாது.

‘ராஜா’ படத்தில் ‘வத்தலகுண்டு’ பாட்டில் நான் நடிப்பதற்கும் அஜித் தான் காரணம். ஆம், ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திற்கு பிறகு நானும் அவரும் இணைந்து நடிக்கவே இல்லை. இந்த நிலையில்தான், அந்த பாடலில் நடிக்க நான் ஒத்துக்கொண்டேன். அப்போதுதான் அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவரது மனைவி ஷாலினியும் வந்திருந்தார். அப்போது இருந்த அஜித்திடம் முன்னால் இருந்த நகைச்சுவை உணர்வை என்னால் பார்க்க முடியவில்லை. முற்றிலும் அமைதியாக மாறிவிட்டார்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.