பரபரப்பாக வெளியான சிம்பு பட நடிகையின் திருமண போட்டோஸ்.. மாப்பிள்ளைக்கு இது 2ம் திருமணமா?
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார்.
சினிமா குடும்பத்திலிருந்து வந்த நடிகை
இவர் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், நடிகையாவதற்கு முன்னரே பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அவர், உடல் எடையை முழுவதுமாக குறைத்து மக்களிந் ஆசை நாயகியாக தெலுங்கில் வலம் வர ஆரம்பித்தார். பின் மலையாளப் படங்களிலும், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
கல்யாணி பிரியதரஷனுக்கு கல்யாணம்
இந்த சமயத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் திருமண வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் சீரியல் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரனை நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
