Gayatri Rema: ‘கணவன் டார்ச்சருக்கு டைரக்டர் கூட போகலாம்.. காசாவது கிடைக்கும்’ காயத்ரி ரெமா ‘கிக்’ பேட்டி!
‘‘வேலைக்கு மட்டும் வாங்க,’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான், நான் இன்னும் ஃபீல்டில் இருக்கிறேன்’
நடிகை காயத்ரி ரெமா, பரபரப்பாக சினிமாத்துறையில் நடக்கும் விசயங்களை வெளிப்படையாக பேசுபவர். சமீபத்தில் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இதோ அந்த பேட்டி:
‘‘பள்ளி, கல்லூரியில் நான் படிப்பாளி. அதனால் படிப்பில் மட்டும் தான் கவனம் இருந்தது. நான் பயோ டெக் படித்தேன், பெரும்பாலும் வட இந்தியர்கள் அதிகம் அதில் படிப்பார்கள். 5 பசங்க தான் படித்தார்கள், 37 பேர் பொண்ணுங்க தான். கல்லூரி முடியும் வரை யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை.
நான் கல்லூரி முடித்து என்னுடைய முதல் படம் வந்த போது, என்னுடன் படித்த ஒருவர் கூட என்னை கண்டுபிடிக்கவில்லை. நான் என்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்ட பிறகு தான், ‘உண்மையாவே அது நீ தானா?’ என்று எல்லாரும் கேட்டார்கள். சினிமாவில் நடக்கும் தவறுகள் குறித்து வெளிப்படையாக பேசினாலும் என்னுடைய வாய்ப்புகளை அது பாதிக்கவில்லை.
எந்த இயக்குனர் அதற்காக அழைக்கிறார் என்று நான் பெயரை இழுத்தால் தான், என் வாய்ப்புகள் பறிக்கப்படும். நான் யார் பெயரை இழுப்பதில்லை. நான் மறுபடி சொல்றேன், இதை நான் தப்புனு சொல்ல மாட்டேன். வீட்டில் இருக்கோம், கணவர் டார்ச்சர் பண்றார், காதலன் டார்ச்சர் பண்றான், அதுக்கு இவர் கூட போனால், பணம் கிடைக்கும், மரியாதை கிடைக்கும், நானும் சந்தோசமா இருப்பேன், ஊர் சுத்துறேன், எனக்கு பிடிச்சு தான் போறேன் என்றால், அது அந்த பெண்ணின் முடிவு, அது ஓகே தான்.
பிடித்திருந்தால் அட்ஜஸ்ட்மெண்ட் போலாம்; தவறில்லை. அது ஒரு வழி. பிடிக்கவில்லை என்றால், இந்த வழியில் தான் போக வேண்டும். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. ‘என்னை விட்ருங்க.. என்று கெஞ்சி, அவளை கட்டாயப்படுத்தி இழுத்தால்’ அதை தான் தவறு என்கிறேன். அது இந்த துறையில் எனக்குத் தெரிந்து நடக்காது.
யாரையும் இங்கே கையை பிடித்து இழுக்க முடியாது. படத்தில் ஒப்பந்தம் ஆகும் முன்பே, எல்லா விசயமும் தெளிவுபடுத்தப்பட்டு தான் உள்ளே வர முடியும். ஓகே என்றால் வரப்போறோம், இல்லை என்றால் வேறு படம் பார்க்க வேண்டியது தான். ஒரு ப்ராஜக்டில் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு மறுக்கும் போது, அடுத்த ப்ராஜக்டில் நம்மை அழைக்கிறார்கள்.
‘வேலைக்கு மட்டும் வாங்க,’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான், நான் இன்னும் ஃபீல்டில் இருக்கிறேன். நான் எல்லாவற்றிக்கும் ஒத்துப் போவாதது தான், இன்னும் ரீச் ஆகாமல் இருக்க காரணம் என்று கூட கூறலாம். அதுவும் ஒரு காரணம் தான்.
எல்லா ஃபீல்டிலும் இது இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் கவலை பொதுவானது தான். ‘பெண்களுக்கு எல்லா இடத்திலும் பிரச்னை இருக்கும், நீ சமாளிக்க முடியும் என்றால் இந்த துறைக்கு போ’ என்று தான் என் பெற்றோர் கூறினார்கள். அதே நேரத்தில் என் அம்மா ஒன்று கூறினார், ‘நீ தனியா எங்கேயும் போக கூடாது, உன் கூட நான் வருவேன்’ என்று கூறினார்.
எல்லாரிடமும் நான் நன்றாக பேசுவேன். ஆனால், யாரையாவது நம்பினால், அவர்கள் மட்டும் தான் என்னை ஏமாற்ற முடியும். போற போக்கில், ஒரு புள்ளியில் எனக்கு தெரிந்து விடும். அவர்களை கணித்து ஒதுங்கிவிடுவேன். உயிர் நம்பிக்கை வைக்கும் இடத்தில் தான் ஏமாற்றம் வரும்,’’
என்று அந்த பேட்டியில் காயத்ரி பேசியுள்ளார்.