"குருவாயூர் கோவில்ல கல்யாணம் நடக்கும்ன்னு ஆசைப்பட்டேன்.. ஆனா.. இப்போ எல்லாம் மாறிடுச்சி" மனம் திறந்து பேசிய நடிகை
சிறுவயதில் தனக்கு குருவாயூர் கோவிலில் திருமணம் ஆவது போல் எல்லாம் கனவு கண்டேன். ஆனால் வளர்ந்த பிறகு திருமணம் எனக்கு செட் ஆகாது என்பதை புரிந்து கொண்டேன் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
தமிழ் மொழியில் ஜெகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள இவர், ஹலோ மம்மி எனும் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது திருமன ஆசைகள் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில், இவரது பேச்சு வைரலாகி உள்ளது.
குருவாயூர் கோவிலில் திருமணம்
இவர், “எனக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. என்னுடைய 8, 10, 25 வயதில் கூட திருமணம் என்பது பெரிய கனவாக இருந்தது. நான் எனது திருமணத்தை குருவாயூர் கோயிலில் நடத்த வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தேன்.
ஆனால் நான் வளர வளர திருமணம் குறித்த என்னுடைய பார்வை முற்றிலும் மாறிவிட்டது. என்னை சுற்றி திருமணமான பலர் இருந்தனர், ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகின்றனர்,
யாரும் மகிழ்ச்சியாக இல்லை
எனக்கு இப்போது 34 வயது ஆகிறது. நான் பார்த்ததிலேயே ஒரே ஒரு குடும்பம் தான் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிறது. அவர்களும் மலையாளிகள் அல்ல. திருமணம் ஆனவர்கள் மற்றவர்கள் சமரசம் செய்து வைப்பதினாலேயே கடமை என சேர்ந்து வாழ்வதை நான் அதிகம் பார்த்திருக்கிறேன்.
இதனால், திருமணம் என்பது எனக்கானது இல்லை என்ற புரிதல் மட்டும் இல்லாமல் அது குறித்த விழிப்புணர்வும் எனக்கு ஏற்பட்டது. இனி நான் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.
மேட்ரிமோனி கணக்கை யாரும் கண்டுகொள்ளவில்லை
மேலும் பேசிய அவர், என்னுடைய 25 வயதில் அம்மாவிடம் ஒரு மேட்ரிமோனி கணக்கை தொடங்குமாறு கூறியிருந்தேன். பின் மேட்ரிமோனி இணையதளத்தில் புகைப்படத்துடன் கூடிய மணப்பெண் விவரக் குறிப்பை பதிவு செய்தேன்.
இதைப் பார்த்த பலரும் எங்களிடம் பெண் கேட்டு விசாரிப்பார்கள் என நினைத்தோம். ஆனால், இந்த மேட்ரிமோனி கணக்கு போலியானது என நினைத்துக் கொண்டதால் எந்த வரனும் வரவில்லை எனக் கூறினார். இவரது பேச்சுதான் இப்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.
நடிகர்கள் விவாகரத்து
சில நாட்களாக திரைத்துறையினர் சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் பின், அவர்கள் சில ஆண்டுகளிலேயே தங்களுக்குள் எதுவும் சரியாக இல்லை என்றும் கூறி விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு திருமணமே வேண்டாம். அது தனக்கு ஒத்து வராது எனக் கூறியுள்ளார்.
இவர் முன்னதாக, திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்ணை சமூகம் எப்படி நடத்துகிறது. திருமணத்திற்கு பின் கணவன் மனைவியை அடக்கும் விதம், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது தாயார் தேற்றும் வழக்கம் குறித்து அம்மு எனும் படத்தில் அழகாக நடித்திருப்பார். இந்தப் படம் பெண்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்படும் வன்முறைகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இருந்ததாக பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த நடிகை திருமணம் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.