Crime: மேட்ரிமோனி மூலம் திருமணமாகாத இளைஞர்களுக்கு வலை.. லட்சக்கணக்கில் மோசடி செய்த கில்லாடி இளம்பெண்!
மேட்ரிமோனி இணயதளம் மூலம் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருமணமாகாத ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான இளைஞர் ஒருவர் ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனிடையே தெலுங்கு மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவுசெய்தும் அந்த இளைஞர் பெண் தேடியுள்ளார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரவண சந்தியா என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.
பின்னர் இருவருக்கும் பிடித்துப்போக, இருவரும் மொபைல் எண்களை பரிமாற்றம் செய்து பேசி வந்துள்ளனர். மேலும், தனது புகைப்படங்களையும் சந்தியா, அந்த இளைஞருக்கு அனுப்பி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் மிகவும் பிடித்துப்போக, அந்த இளைஞரும் தொடர்ந்து சந்தியாவுடன் பேசிவந்திருக்கிறார்.
