Vijay Mother Shoba: ‘விஜய் ஆபிஸ் போய் அவரிடம் கேட்டேன்’ -ஷோபா ஓப்பன் டாக்!
vijay mother Shoba About Varisu Song: ‘‘எனக்கு எப்போதுமே விஜய் உச்சஜதியில் பாடினால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் அவ்வளவாக அப்படி பாடலை தேர்வு செய்யமாட்டார். சச்சின் படத்திற்கு பிறகு, ஜில்லா படத்திற்கு பிறகு உச்சஜதியில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்’’ -ஷோபா
நடிகர் விஜய் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்க எப்படி அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் காரணமாக இருந்தாரோ, அதே மாதிரி தான், விஜய்யின் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் முழு காரணமாக இருந்தவர் அவரது தாய் ஷோபா சந்திரசேகர்.
பிறப்பால் இசை குடும்பத்திலிருந்து வந்த ஷோ, ஆன்மீக ஆல்பங்கள் மட்டுமல்லாமல் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக விஜய் உடன் இணைந்து நிறைய பாடல்களை அவர் பாடியுள்ளார். இடையில் விஜய்-பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.
அதன் பின் விஜய் பெற்றோரிடம் எப்படி இருக்கிறார்? அவரை சந்திக்கிறாரா? என்கிற கேள்வியெல்லாம் ரசிகர்கள் மனதில் எழுந்ததுண்டு. இதற்கிடையில், ஷோபா பிரபல இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மகன் விஜய் உடன் அவர் நெருக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதோ அந்த பேட்டி:
‘‘ரஞ்சிதமே… பாடல் வெளியாகும் முன்பு, ப்ரொமோ ஒன்று வெளியிட்டார்கள். அதில் ‘ரஞ்சிதமே…’ என்று ஹை பிச்சில் விஜய் பாடினார். அதை கேட்டதும், பாடல் நன்றாக ஹை பிச்சில் இருக்கே என்று கேட்டதும் தோன்றியது. மறுநாளே விஜய் அலுவலகத்திற்கு கிளம்பிப் போனேன். விஜய்யிடம் கேட்டேன், ‘ப்ரொமோவில் வரும் ரஞ்சிதமே… என்பது தான் ஸ்டார்ட்டிங்காம்மா…? முழு பாடல் இருக்கா? நாளை வரை என்னால் காத்திருக்க முடியாது, போட்டு காட்ட முடியுமா’ என்று கேட்டேன்.
அவரும் முழு பாடலை போட்டு காண்பித்தார். அதில் பாடலின் துவத்தில் வேறு வரிகள் வந்தது. ரொம்ப நல்லா இருக்கு, கலர்புல்லா இருக்கு, ரஞ்சிதமே என்பது மனோரஞ்சிதம் பூ மாதிரி சாஃட்டா இருக்கு என்று கூறினேன். அதன் பின் நீங்கள் எல்லோரும் அந்த பாடலை கேட்டிருப்பீர்கள். விஜய் பாடிய பாடல்களில் எந்த பாடல் பிடிக்கும் என்று என்னிடம் கேட்டால் நான் ரஞ்சிதமே பாடலை தான் சொல்வேன்.
எப்போதெல்லாம் தோனுதோ, அப்போதெல்லாம் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். உடன் பாடிய மானசியும் நன்றாக பாடியுள்ளார். அந்த லிரிக்கல் வீடியோ ரொம்ப அருமையாக இருந்தது. எனக்கு எப்போதுமே விஜய் உச்சஜதியில் பாடினால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் அவ்வளவாக அப்படி பாடலை தேர்வு செய்யமாட்டார். சச்சின் படத்திற்கு பிறகு, ஜில்லா படத்திற்கு பிறகு உச்சஜதியில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
உங்களுக்கு விஜய் பாடுவது தான் பிடிக்கும்; எனக்கு விஜய்யின் தமிழ் உச்சரிப்பு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் எனக்கு ரஞ்சிதமே பாடல் ரொம்ப பிடிக்கும்,’’
என்று அந்த பேட்டியில் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்