அரசியலுக்காக பிரம்மச்சரியம் இருக்கும் விஜய்.. ஆட்சியை பிடிக்க இதுதான் வழி..பிரபலம் போட்டுடைத்த சீக்ரெட்
நடிகர் விஜய் அரசியல் வாழ்க்கையில் ஜெயித்து ஆட்சியைப் பிடிக்க ஜோசியரின் அறிவுரையை ஏற்று குடும்பத்தைப் பிரிந்து பிரம்மச்சரியம் இருந்து வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் சங்கர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழவதும் சமீப காலமாக பேசு பொருளாக இருந்த ஒரே விஷயம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தான். அரசியல் கட்சியினரும் சினிமா நடிகர்களும், விஜய்யின் ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் நடிகர் விஜய்யைக் காணவும், அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கவும் ஆவலாக காத்திருந்தனர்.
முதல் மாநாட்டில் மிஸ் ஆன குடும்பம்
இதனால் மாநாடு நடக்கும் இடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே அனைவரும் விக்கிரவாண்டி வி.சாலையில் குவிந்தனர். ஆனால், விஜய் குடும்பத்திலிருந்து அவரது தாய் சோபனாவையும் தந்தை எஸ். ஏ. சந்திர சேகரையும் தவிர வேறு யாரும் மாநாட்டிற்கு வரவில்லை. முரசொலி செல்வம் இறந்த சமயத்தில், நடிகர் விஜய்க்கு பதிலாக அவரது மனைவி சங்கீதா பங்கேற்ற நிலையில், அவர் ஏன் மாநாட்டிற்கு வரவில்லை என்ற கேள்வி பல இடங்களில் இருந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அவரது மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் ஏன் மாநாட்டிற்கு வரவில்லை என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் சங்கர் ஆகாயம் யூடியூப் சேனலுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மனைவியை பிரிந்த விஜய்
அந்தப் பேட்டியில், விஜய்யும் அவர் மனைவி சங்கீதாவும் ஒன்றாக இல்லை. அது இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் அனைத்தும் பொதுவெளிக்கு வந்து தான் ஆக வேண்டும்.
சங்கீதா சென்னையில் தான் உள்ளார். ஆனால் அவர் விஜய்யுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இல்லை. அந்தப் பிரிவு உண்மையானது தான் என பலரும் கூறுகின்றனர். சங்கீதா அவரது பிள்ளைகளுடன் தனியாகத் தான் உள்ளார். அதனால் தான், விஜய்யின் மகன் சஞ்சய் லைகா நிறுவனத்துடன் இணைந்து படம் எடுக்க ஒப்பந்தமானது குறித்தும் கூட பொதுவெளியில் பெரிதாக எதுவும் பேசாமல் இருக்கிறார் எனக் கூறியுள்ளார். சங்கீதா தற்போது மொத்தமாக அவரது தந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டார்.
தந்தையை ஒதுக்கும் சஞ்சய்
சஞ்சய் தனது முதல் படத்திற்கு யாரை பிஆர்ஓவாக நியமிக்க வேண்டும் என்பதில் கூட தெளிவாக இருந்துள்ளார். அவர் முற்றிலுமாக தனது தந்தைக்கு வேண்டப்பட்டவர்களை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். அத்துடன் தனது முதல் படத்திற்கு அஜித்தின் பிஆர்ஓ தான் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
முரசொலி செல்வம் இறந்த செய்தி அறிந்து, சங்கீதா நடிகர் விஜய்க்கு பதிலாக துக்கம் விசாரிக்க சென்றார். ஆனால், ஏன் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நினைத்தால் வந்திருக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய்யின் பின்புலத்தில் ஜோசியர்
விஜய் தற்போது முழுவதும் கடலூரைச் சேர்ந்த ஒரு ஜோசியரின் பிடியில் உள்ளார். விஜய் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு அவர் தான் பின்புலமாக இருக்கிறார். அந்த ஜோசியர் தான் விஜய்யை குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரித்தார். விஜய்யும், சங்கீதாவும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களா என்பது குறித்து தெரியாது.
ஜோதிடர் விஜய்யிடம், நீங்கள் பிரம்மச்சரியம் இருந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று கூறியிருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஜோதிடர் ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் தனது மனைவியை விஜய் பிரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் ஜோதிடர்கள் முக்கிய ரோல் வகிக்கிறார்கள் என்றார்.
மேலும், விஜய் இப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார். இதற்கு முன் கலைஞர் கருணாநிதியோ, எம்ஜிஆரோ தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்ததில்லை. எனவே சங்கீதா குறித்து விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.