Vijay Antony: ' நம்பிக்கை இல்லை.. வாழ்வின் ஒரு பகுதி' - மகள் இறப்பு பற்றி உருகி பேசிய விஜய் ஆண்டனி-actor vijay antony opens up on the death of her daughter for the first time - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony: ' நம்பிக்கை இல்லை.. வாழ்வின் ஒரு பகுதி' - மகள் இறப்பு பற்றி உருகி பேசிய விஜய் ஆண்டனி

Vijay Antony: ' நம்பிக்கை இல்லை.. வாழ்வின் ஒரு பகுதி' - மகள் இறப்பு பற்றி உருகி பேசிய விஜய் ஆண்டனி

Aarthi Balaji HT Tamil
Sep 26, 2024 07:02 AM IST

Vijay Antony: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரிழந்த நிலையில் அவர் பற்றி பேசி உள்ளார்.

Vijay Antony: ' நம்பிக்கை இல்லை.. வாழ்வின் ஒரு பகுதி' - மகள் இறப்பு பற்றி உருகி பேசிய விஜய் ஆண்டனி
Vijay Antony: ' நம்பிக்கை இல்லை.. வாழ்வின் ஒரு பகுதி' - மகள் இறப்பு பற்றி உருகி பேசிய விஜய் ஆண்டனி

அவர் கடந்த ஆண்டு தனது மகள் மீராவின் சோகமான மரணத்துடன் கடினமான நேரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து உள்ளார். விஜய் ஆண்டனி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இதனிடையே விஜய் ஆண்டனி, இந்தியா டுடேவுக்கு அளித்த புதிய நேர்காணலில் படம் பற்றியும் அதே நேரத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகளையும் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

விஜய் ஆண்டனி என்ன சொன்னார்

பேட்டியின் போது, விஜய் ஆண்டனி தனது மகளை இழந்தது மற்றும் ஒரு விபத்தை சந்தித்தது குறித்து பேசினார், " எதுவும் கடினமாக இல்லை. இங்கே எல்லாமே நம் வாழ்வின் ஒரு பகுதி தான். சிறு வயதிலிருந்தே எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. எதுவுமே தெரியாத போது, எங்கே நிற்க முடியும்? எதுவுமே இல்லாத போது, எதைப் பிடித்துக் கொள்வீர்கள்?" என்றார்.

விஜய் ஆண்டனியின் மகள் செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது அறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மீராவின் திடீர் மரணம் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் நேரில் சென்று விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

காலணிகள் அணியாதது ஏன்?

மேலும் பட விளம்பரங்களின் போது காலணி அணிவதை தவிர்ப்பது ஏன் என்பதையும் நடிகர் விஜய் ஆண்டனி வெளிப்படுத்தினார், " காலணிகள் அணியாதது உண்மையில் எனக்கு ஒரு ஆடம்பரம். நீங்கள் காலணிகளை அணிந்திருக்கிறீர்கள், இது போன்ற விஷயங்களால் கட்டப்பட்டிருக்கிறீர்கள். மறுபுறம், நான் ஆடம்பரமானவன். இதெல்லாம் இல்லாம என்னால போக முடியும். 

எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் கண்டிப்பாக செருப்பு அணிவேன். நாங்கள் காட்டில் ஒரு படப்பிடிப்பு நடத்தினோம், அங்கு பல பூச்சிகள் மற்றும் பிற பொருட்கள் இருந்தன. அப்போது, நான் ஷூ அணிந்திருந்தேன். இலங்கையில் எனது நேரடி இசை நிகழ்ச்சிக்கு, எல்லா இடங்களிலும் மின்சார வயரிங்குகள் இருந்ததால் நான் அதை அணிந்தேன். அது பாதுகாப்பாக இல்லை. எனவே, தேவைப்படும் போது அவற்றை அணிகிறேன். ஆனால் பெரும்பாலும், 70% நேரம் நான் வெறுங்காலுடன் நடக்கிறேன் “ என்றார். 

இயக்குநர் தனா இயக்கத்தில் ஹிட்லர் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நன்றி: இந்தியா டுடே

பொறுப்புத் துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.