Ritika: வா.. வா.. என் தேவதையே - பெண் குழந்தைக்கு அம்மாவான சீரியல் நடிகை ரித்திகா!
Ritika: ரித்திகாவிற்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார்.
Ritika: சீரியல் நடிகை ரித்திகா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவரின் வளைகாப்பு புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலானது. இதனிடையே ரித்திகாவிற்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ ராஜா ராணி ’ சீரியலில் வினோதினி என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரித்திகா. தொடர்ந்து ‘ சிவா மனசுல சக்தி ’ ‘ சாக்லேட்’ , ‘ திருமகள் ’ உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘ குக் வித் கோமாளி ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம்
அந்த நிகழ்ச்சியில் இவருடன் கோமாளியாக கலந்து கொண்ட பாலாவை இவர் காதலிப்பதாக கூறி தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து அதற்கு இவர் வீடியோ வாயிலாக விளக்கமளிக்க, அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.