"நான் அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தேன்.. இன்னைக்கும் எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு" மனம் திறந்த எஸ்கே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "நான் அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தேன்.. இன்னைக்கும் எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு" மனம் திறந்த எஸ்கே

"நான் அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தேன்.. இன்னைக்கும் எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு" மனம் திறந்த எஸ்கே

Malavica Natarajan HT Tamil
Nov 26, 2024 11:16 AM IST

என் தந்தை இறந்த பிறகு அவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தேன். அதிலிருந்து நான் மீண்டு வருவதற்கு என் வேலை தான் உதவியது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Sivakarthikeyan is currently one of the top stars in the Tamil industry
Sivakarthikeyan is currently one of the top stars in the Tamil industry

இந்நிலையில், நடிகை குஷ்பு திரைப்பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் சில கேள்விகளைக் கேட்டு பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியின் படி, சிவகார்த்திகேயன் தன் வாழ்வில் கடந்து வந்த மிகப்பெரும் துயர்களையும், அதை சமாளிக்க தனக்கு உதவியவர்களையும் நினைவு கூர்ந்தார்.

மன அழுத்தத்தில் இருந்தேன்

சிறை கண்காணிப்பாளராக இருந்த எனது தந்தை கடந்த 2000ம் ஆண்டு பணியில் இருக்கும் போதே மரணமடைந்தார். அப்போது, எனக்கு வெறும் 17 வயது தான். தந்தை இறந்த சமயத்திலிருந்து வெளியே சொல்ல முடியாத மனஅழுத்தத்தில் இருந்தேன். இதனால், எதிலும் நாட்டம் இல்லாமலும் போனது.

என் வாழ்க்கை ஆரம்பித்தது இங்கு தான்

அப்போது, நான் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபோது, இதை எல்லாம் நான் மறக்க உதவியது என் நண்பர்கள் தான். அவர்கள் தான் முதன் முதலில் என்னை மேடையேற்றி வைத்து, நீ என்ன நினைக்குறியோ அத பண்ணு, ஆனா அதை நாங்க எல்லாரும் ரசிக்கனும்ன்னு" சொன்னார்கள். அப்போது ஆரம்பித்தது என் வாழ்க்கை.

இப்போது என்னுடைய எல்லா அழுத்தங்களும் போனதற்கு காரணமாகவும் சினிமா இருக்கிறது. ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் எனக்கு தெரபியாக மாறியது... சினிமா எப்போதுமே என் விருப்பம். ஆரம்பத்தில் இருந்தே, நான் மக்களை மகிழ்விக்க விரும்பினேன்.

நகைச்சுவை தான் என் கவசம்

எனக்கு என்ன தெரியுமோ அதை வைத்து மக்களை மகிழ்விக்கத் தொடங்கினேன். அவர்கள் என்னை தொலைக்காட்சியில் பொழுது போக்காளராகத் தான் பார்த்தார்கள். பின் அதையே நான் சினிமாவிம் செய்யத் தொடங்கினேன். தொலைக்காட்சியோ, சினிமாவோ நகைச்சுவை தான் எனது கவசம்.

நான் நடிகர் ரஜினியின் மிகப்பெரும் ரசிகன். அவரது படம் மட்டுமல்ல, எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் 2 நாட்களுக்குள் தியேட்டரில் பார்ததுவிட வேண்டும் என துடிப்பேன். பின், சினிமா கனவு எனக்குள் வர ஆரம்பித்த பிறகு 2006ம் ஆண்டிலிருந்து ஒரு படத்தைக் கூட திருட்டு பதிப்பில் பார்த்ததே இல்லை. நான் அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கிறேன் என்றார்.

அப்பாவுடனான நினைவுகள் அப்படியே இருக்கிறது

மேலும், எனது தந்தை தான் என் முதல் ஹீரோ. அவரது காலணிகளுக்கு பாலிஷ் போடுவது, சீருடையில் பேட்ஜ் வைப்பது, பெல்ட் ஹூக்கிற்கு உதவுவது எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது. அமரனில் அவரைப் போல ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அனைத்து கைதட்டல்களையும் ஆரவாரங்களையும் கேட்டு அவர் இப்போது மகிழ்ச்சியடைவார் என்று எனக்குத் தெரியும் என பெருமையாக கூறினார்.

அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் அமரன். தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான இந்தப் படம் தற்போது 25 நாட்களைக் கடந்தும் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. அத்துடன் அந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று 300 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம், ஷிவ் ஆரூர் மற்றும் ராகுல் சிங் ஆகியோரின் புத்தகத் தொடரான India's Most Fearless: True Stories of Modern Military Heroes என்பதன் தழுவல் ஆகும். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளியான படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.