‘வடிவேலை அட்டாக் செய்ய அரை மணி நேர இன்டர்வியூ’ சிங்கமுத்து கூறிய ஜெ அறை ரகசியம்!
Actor singamuthu told what happened in Jayalalithaa's room: ‘அம்மா உங்களுக்கு திடீர்னு கோபம் வரும், செருப்பை தூக்கி அடிப்பீங்க, அதில் ஊசி இருக்கும், அது கண்ணுல குத்தும்’ என்றெல்லாம் சொன்னாங்க என்றேன். ‘இதெல்லாம் வேற நடக்குதா?’ என்று ஜெயலலிதா என்னிடம் கேட்டார்.

திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்த போது, அவருக்கு எதிராக அதிமுகவை ஆதரித்து சிங்கமுத்து பிரச்சாரம் செய்தது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த வாய்ப்பு எப்படி சிங்கமுத்துவுக்கு கிடைத்தது என்பதை சமீபத்தில் இணையதளம ஒன்றுக்கு பேட்டியாக கூறியுள்ளார் சிங்கமுத்து. இதோ அந்த பேட்டி:
‘‘வடிவேலு பிரச்சாரத்தில் திமுகவிற்கு பயங்கர கூட்டம் கூடியது. இதைப் பார்த்து, அம்மாவிற்கு ஒரு தகவல் வந்தது. ‘திமுக பிரச்சாரங்களில் வடிவேலு மூலம் கூட்டம் திரள்கிறது’ என்று அந்த தகவல் சென்றது. ஒரு தரப்பு, கூட்டம் கூடுகிறது என்றிருக்கிறார்கள், ஒரு தரப்பு, கூட்டம் கூடுபவர்கள் ஓட்டு போடமாட்டார்கள், இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அம்மாவிடம் கூறியிருக்கிறார்கள்.
‘சரி, வடிவேலுக்கு மாற்றா யாரை இறக்கலாம்’ என்று அம்மா கேட்டிருக்கிறார். அப்போது தான், ‘சிங்கமுத்துனு ஒருத்தர், காமெடி எழுத்தி கொடுக்கிறார், எஸ்.எஸ்.சந்திரன் ஊரான சிவகங்கை தான் அவர் ஊரு. வடிவேலு கூட நடிச்சவர் தான்’ என கூறியிருக்கிறார்கள். ‘அப்படியா… சரி வரச்சொல்லுங்க பார்க்கலாம்’ என அம்மா சொல்லியிருக்கிறார்.



