Aishwarya Lekshmi: அர்ஜுன் தாஸ் உடன் காதலா? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அர்ஜுன் தாஸ் உடன் எடுத்த கொண்ட புகைப்படம் குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

மாடலாக இருந்த ஐஸ்வர்யா லட்சுமி 2017 ஆம் ஆண்டு விஷால் நடித்த ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ஐஸ்வர்யா லட்மியும், பெரிய அளவில் வெளியில் தெரியாமல் போனார்.
அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இது வரையில் அவர் நடித்த படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. அவரின் தோற்றம் போன்று அனைவரும் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதள
நடிப்பது மட்டுமின்றி அவர் நடிகை சாய் பல்லவியை வைத்து கார்கி என்ற படத்தை தயாரித்து உள்ளார். இவர் பொன்னியின் செல்வன் 1 படத்தில் பூங்குழலியாக நடித்து விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றார். அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிரபலங்கள் பூங்குழலி போன்ற தோற்றத்திலிருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
