அந்த விஷயத்தை பார்க்கச் சொல்லி நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டைரக்டர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்
அந்த விஷயத்தை பார்க்கச் சொல்லி நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டைரக்டர் என பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல் கொடுத்துள்ளார்.
கேரளாவில் முக்கிய நடிகை இயக்குநர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளது பற்றி பயில்வான் ரங்கநாதன் பேட்டியாக அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில்,
’’கேரளாவில் இயக்குநர் பாலச்சந்திர மேனன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்தார். இயக்குநர் பாக்யராஜ் ஸ்டைலில் படமெடுத்துக்கொண்டிருந்ததால், ’கேரள பாக்யராஜ்’ என்று பாலச்சந்திர மேனனை அழைப்பார்கள். 2017ஆம் ஆண்டு, ’மினு முந்நீர்’ என்னும் கவர்ச்சி நடிகை, பாலச்சந்திர மேனன் மீது பலாத்காரப் புகார் கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்த பலாத்காரப் புகாரில் ’டி இங்கொட்டு நோக்கியே’ என்ற மலையாளப் படத்தில் தன்னை நடிக்கவைத்திருந்தார், பாலச்சந்திர மேனன் என்றும்; அப்போது அவரது அறைக்கு தன்னை அழைத்ததாகப் போனபோது, அங்கு ஒரு பெண்ணை மூன்று பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறியிருக்கிறார்.
பலாத்காரப் புகார்:
மேலும், அதனைத் தான் பார்க்கும்படி தன்னை நிர்பந்தித்தார், பாலச்சந்திர மேனன் எனவும்; அப்போது அதனைப் பார்க்கவில்லை என்றால் தான் நடித்த காட்சிகளை வெட்டி எறிந்துவிடுவேன் என மிரட்டினார் எனவும் பாலச்சந்திர மேனன் குறித்து தெரிவித்து இருக்கிறார்.
மேலும் வேறுவழியில்லாமல் தானும் பார்க்க ஒத்துக்கொண்டேன் எனக்கூறிய மினு முந்நீர் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார், பாலச்சந்திர மேனன் எனப் புகார் கொடுத்திருக்கிறார்.
பாலச்சந்திர மேனன் தான் நடிகை கார்த்திகா, சோபனா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ ஆகிய நடிகர், நடிகைகளை மலையாளத் திரையுலகில் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக நடந்து வரும் விசாரணையில், பாலச்சந்திர மேனன் விரைவில் கைதுசெய்யப்படுவார் எனத்தெரிகிறது.
பிரபல ஹிந்தி நடிகர் கோவிந்தா, பாஜகவில் சேர்ந்து எம்.பியாக இருந்தவர். இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் கொல்கத்தாவுக்கு செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபோது தன்னுடைய துப்பாக்கியைச் சுத்தம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவரது துப்பாக்கியில் இருக்கும் குண்டு வெடித்தது. காலில் பலத்த காயம் ஏற்பட்டது. துப்பாக்கியில் இருக்கும் கோவிந்தாவை மும்பையில் மருத்துவமனையில் சேர்த்தனர். கோவிந்தா காலில் பாய்ந்த குண்டு நீக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். தற்போது கோவிந்தா சிவசேனா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா விஜயகுமாரின் பெர்ஷனல்ஸ்:
நடிகை வனிதா விஜயகுமார் 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அதன்பின், வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்திருந்தவர். அதன்பின், அவர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரபரப்பினை ஏற்படுத்தியவர். சமீபத்தில் நடித்த தண்டுபாளையம் படத்திலும் பயங்கர வில்லியாக நடித்திருந்தார், வனிதா விஜயகுமார்.
2000ஆம் ஆண்டு, டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார், வனிதா விஜயகுமார். அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். அவரது மகன் தந்தையும் டிவி நடிகருமான ஆகாஷூடன் வாழ்ந்து வருகிறார்.
அடுத்து ராஜன் ஆனந்த் என்பவரை, திருமணம் செய்துகொண்டார், வனிதா விஜயகுமார். 2012ஆம் ஆண்டு இவரையும் விவாகரத்து செய்தார், வனிதா விஜயகுமார். 2020ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்னும் விசுவல் கம்யூனிகேஷன் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார், வனிதா விஜயகுமார். ஆனால், பீட்டர் பாலின் முதல் மனைவி கொடுத்தப் புகாரினால், வனிதா விஜயகுமார் பீட்டருடனும் இருந்து பிரிந்துவிட்டார்.
அதன்பின், நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ராபர்ட் மாஸ்டர் வனிதா விஜயகுமார் தயாரித்த படத்தில் நடித்தார். அந்தப் படத்தை ராபர்ட் மாஸ்டரே இயக்கியிருந்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்கள். பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள். கேட்டதற்குப் படத்தின் புரொமோஷனுக்காக அவ்வாறு சொன்னேன் என்று சொன்னார், வனிதா விஜயகுமார். இப்போது ராபர்ட் மாஸ்டருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார், வனிதா விஜயகுமார். அதற்கான ஸ்டில்களை வெளியிட்டிருக்கிறார்.
தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவருக்கு 22 வயதில் ஜோவிகா என்னும் மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது’’ என மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.
நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்