Gitanjali Aiyar Passes Away: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் மறைவு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gitanjali Aiyar Passes Away: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் மறைவு

Gitanjali Aiyar Passes Away: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் மறைவு

Manigandan K T HT Tamil
Jun 08, 2023 10:11 AM IST

Gitanjali Aiyar: 30 ஆண்டுகளாக தூர்தர்ஷனில் பணியாற்றிய இவர், 4 முறை சிறந்த தொகுப்பாளர் விருதை வென்றுள்ளார்.

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர்
தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர்

30 ஆண்டுகளாக தூர்தர்ஷனில் பணியாற்றிய இவர், 4 முறை சிறந்த தொகுப்பாளர் விருதை வென்றுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் லோரெட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர், 1971 ஆம் ஆண்டில் தூர்தர்ஷனில் சேர்ந்தார். நான்கு முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதைப் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார்.

அகில இந்திய வானொலியில் வெள்ளிக்கிழமை இரவு ஆங்கில பாடல் கோரிக்கைகளை எடுத்துக்கொள்வது தொடர்பான பிரபலமான நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கினார்.

செய்தித் துறையில் பல தசாப்தங்களாக பணியாற்றிய பின்னர் கார்ப்பரேட் தகவல்தொடர்புகள், அரசாங்க தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தடம் பதித்தார். இவர் இந்தியாவின் உலக நிதியத்தின் முக்கிய நன்கொடையாளர்களின் தலைவராக இருந்தார்.

கீதாஞ்சலி ஐயருக்கு இரங்கல் தெரிவித்தும், அவர் காலத்தில் வெளியான செய்திகளை நினைவு கூர்ந்தும் ட்விட்டரில் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான நேத்தா டிசவுசா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கீதாஞ்சலி ஐயர் அவர்கள் எங்கள் தொலைக்காட்சித் திரைகளை அலங்கரித்து, எங்கள் செய்தி பார்க்கும் அனுபவங்களில் அழியாத முத்திரையைப் பதித்த நாட்களை நாம் அன்புடன் நினைவில் கொள்கிறோம். அவரது அகால மரணத்தால் துயரமடைந்துள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகையாளர் ஷீலா பட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராகவும், அன்பான மற்றும் நேர்த்தியான நபராகவும், மகத்தான எண்ணம் கொண்ட பெண்ணாகவும் இருந்த கீதாஞ்சலி ஐயர் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.