Actor Mohan: “முதலியார் பேசுறேன்”;வெள்ளை வேட்டி.. ஆஃப் பனியன்.. நெற்றிப்பட்டை..ரியல் நாயக்கர் மீட்டிங் மொமன்ட்! - மோகன்!-actor mohan latest interview about meeting moment with real nayagan varadarajan mudaliar - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Mohan: “முதலியார் பேசுறேன்”;வெள்ளை வேட்டி.. ஆஃப் பனியன்.. நெற்றிப்பட்டை..ரியல் நாயக்கர் மீட்டிங் மொமன்ட்! - மோகன்!

Actor Mohan: “முதலியார் பேசுறேன்”;வெள்ளை வேட்டி.. ஆஃப் பனியன்.. நெற்றிப்பட்டை..ரியல் நாயக்கர் மீட்டிங் மொமன்ட்! - மோகன்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 28, 2024 08:43 AM IST

Actor Mohan: அவரைப் பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். அதனால், அவர் போன் செய்தார் என்று சொன்னவுடன் கொஞ்சம் தடுமாறினேன். அவர் என்னிடம் நான் உங்களை பார்க்க வேண்டும்; பேச வேண்டும் என்று சொன்னார். - மோகன்!

Actor Mohan: “முதலியார் பேசுறேன்”;வெள்ளை வேட்டி.. ஆஃப் பனியன்.. நெற்றிப்பட்டை..ரியல் நாயக்கர் மீட்டிங் மொமன்ட்! - மோகன்
Actor Mohan: “முதலியார் பேசுறேன்”;வெள்ளை வேட்டி.. ஆஃப் பனியன்.. நெற்றிப்பட்டை..ரியல் நாயக்கர் மீட்டிங் மொமன்ட்! - மோகன்

மோகன்
மோகன்

இது குறித்து அவர் பேசும் போது, “ இந்த சம்பவம் ‘நாயகன்’ படம் வெளிவருவதற்கு முன்னர் நடந்தது.ஒரு நாள் எனக்கு வரதராஜ முதலியாரிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. அவரைப் பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். அதனால், அவர் போன் செய்தார் என்று சொன்னவுடன் கொஞ்சம் தடுமாறினேன். அவர் என்னிடம் நான் உங்களை பார்க்க வேண்டும்; பேச வேண்டும் என்று சொன்னார்.

 

நேரில் சென்றேன்

அத்துடன் அவரே என்னை பார்க்க வருகிறேன் என்று கூறினார். உடனே நான் இல்லை சார், நானே உங்களை பார்க்க வருகிறேன் என்று கூறினேன். அப்போது சென்னையில் உள்ள மந்தைவெளியில் சிங்கப்பூர் பங்களா ஒன்று இருந்தது. அங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கும். அங்குதான் நான் பிசியாக ஷூட்டிங் செய்து கொண்டிருந்தேன். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி, சாந்தோம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன்.

வரதராஜ முதலியார்
வரதராஜ முதலியார்

அப்போதுதான் அவர் மும்பையில் இருந்து சென்னையில் வந்து தங்கி இருந்தார். நல்ல வேட்டியும், ஆஃப் பனியனையும் போட்டுக்கொண்டு, நெற்றியில் பட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக இருந்தார். அவர் என்னிடம் உங்களுடைய படங்கள், பாடல்கள் எல்லாவற்றையும் பார்த்து நாங்கள் மிகவும் ரசித்திருக்கிறோம். என்னுடைய குடும்பத்தினர் உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லி மிகவும் ஆசைப்பட்டார்கள். அதனால் தான் உங்களை வரவழைத்தேன் என்றார்.

பயமுறுத்திய முதலியார்

அவர் அந்த வயதிலும் அவ்வளவு ஃபிட்டாக இருந்தார். கையை தூக்கி பைசப்ஸை காண்பித்தார். என்னையும் அதேபோல ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மும்பையில் எங்களுக்கு எந்த விதமான டென்ஷன் இருந்தாலும் உங்களுடைய படங்களை சிடியில் போட்டு நாங்கள் பார்த்து எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்றார்.

மணிரத்னம்
மணிரத்னம்

அவரது குடும்பத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரது மனைவி அவரது வீட்டில் மிகப் பெரிய பூஜை ரூமை வைத்திருந்தார். என்னை அவர் அங்கு அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்றே சொல்லலாம். மூன்று தடவை மீண்டும் அதே மாதிரியான சந்திப்புகள் நடந்தன. எப்போது போனாலும் அவர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். நான் உடனே எனக்கு எப்போதும் உங்களுடைய அன்பு போதும் என்று சொல்லி வந்து விடுவேன்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.