HBD Vadivelu: பிளாக் அண்ட் ஒய்ட் பெரிசுகள் முதல் ஜென் இஸட் சிறுசுகள் வரை..மீம்ஸ்களின் நாயகன்! சிரிப்புக்காரன் வடிவேலு-tamil cinema comedy actor over three decades vadivelu birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vadivelu: பிளாக் அண்ட் ஒய்ட் பெரிசுகள் முதல் ஜென் இஸட் சிறுசுகள் வரை..மீம்ஸ்களின் நாயகன்! சிரிப்புக்காரன் வடிவேலு

HBD Vadivelu: பிளாக் அண்ட் ஒய்ட் பெரிசுகள் முதல் ஜென் இஸட் சிறுசுகள் வரை..மீம்ஸ்களின் நாயகன்! சிரிப்புக்காரன் வடிவேலு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 12, 2024 02:26 PM IST

HBD Vadivelu:: பிளாக் & ஒய்ட் பெரிசுகள் முதல் ஜென் இஸட் சிறிசுகள் வரை மனதில் பதிந்த காமெடி நடிகர், மீம்ஸ்களின் நாயகன், சிரிப்புக்காரன் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Vadivelu Birthday: பிளாக் & ஒய்ட் பெரிசுகள் முதல் ஜென் இஸட் சிறிசுகள் வரை..மீம்ஸ்களின் நாயகன்! சிரிப்புக்காரன் வடிவேலு
Vadivelu Birthday: பிளாக் & ஒய்ட் பெரிசுகள் முதல் ஜென் இஸட் சிறிசுகள் வரை..மீம்ஸ்களின் நாயகன்! சிரிப்புக்காரன் வடிவேலு

தமிழில் சுமார் 450 படங்களுக்கு மேல் காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் தோன்றியிருக்கிறார். வைகப்புயல் என்ற கோலிவுட்டினரால் அழைக்கப்படும் வடிவேலு தமிழ் சினிமாக்களில் மட்டும் நடித்து உலகம் முழுவதும் தமிழ் தெரிந்தவர்களையெல்லாம் தனது அற்புதமான நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவராக உள்ளார்.

சிரிப்பு டாக்டராக வடிவேலு

தமிழ் சினிமாவில் காமெடி என்றால் கவுண்டமணி - செந்தில் ஜோடி என்ற இருந்த காலத்தில் மெல்ல தனக்கென ஒரு இடத்தை பிடித்து சோலோ காமெடியனாக தன்னை தக்கவமைத்து கொண்டவர் வடிவேலு. பொதுவாக 90ஸ்களின் காலத்தை பல விஷயங்களில் பொற்காலம் என்பார்கள். அப்படியான காலகட்டத்தில் திரையுலகில் காமெடி நாயகனாக தனியொரு ஆவர்த்தணம் செய்து ரசிகர்கள் மனதில் குடிபுகுந்தவர் வடிவேலு.

காமெடிகளில் பல வகைகள் உண்டு. இதில் வடிவேலு ஸ்டைலாக தன்னை வருத்தி மற்றவர்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், பாடி லாங்குவேஜ் மூலமும் சிரிப்பை வரவழைக்கும் வித்தைக்காரனாக திகழ்ந்தார்.

சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கவுண்டமணி - செந்திலுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த போதிலும், பின்னர் தனக்கு கிடைத்தை வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி தனித்துவ காமெடியனாகவும் உருவெடுத்தார்.

ஹீரோக்களில் இரு துருவங்கள் இரு துருவங்கள் இருப்பது போல், காமெடியிலும் வடிவேலுவுடன், விவேக் மற்றொரு துருவமாகவும், போட்டியாளராகவும் திகழ்ந்தார். தனது எதார்த்த நகைச்சுவை மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன வடிவேலு, சிரிப்பு டாக்டராகவே திகழ்ந்தார்.

ஒரு கட்டத்தில் வடிவேலுவின் கால் ஷீட் கிடைத்தால் மட்டுமே படத்தை ஆரம்பிப்போம் என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமா உலகை தன் கைக்குள் வைத்திருந்தார் வடிவேலு.

வடிவேலுவுக்கு பிடித்தமான விஷயங்கள்

எல்லோரையும் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கு வடிவேலு டாப் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பிரியராம். அந்த கார்டூனின் ஏராளமான கலெக்சனை அவர் வைத்துள்ளாராம்.

வடிவேலுக்கு பிடித்தமான அவுட்டிங் ஏரியா என்றால் அது குற்றாலம். வெளிநாடுகளில் லண்டன் பிடிக்கும்.

அவருக்கு பிடித்தமான நடிகை சரோஜா தேவி, பிடித்த பாடகர் டி.எம். செளந்தராராஜன் ஆகியோர் தானாம். ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட வடிவேலு, வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண நிற சட்டையை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.

ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான விஷயம் என்றாலும், ரசிகர்களின் அன்பு தொல்லையால் விமானத்தில் பயணிப்பாராம். அதேபோல் சாப்பாட்டு விஷயத்தை பொருத்தவரை அயிரை மீன் குழம்பு பிரியரான இவர், எண்ணெய் சேர்ந்த் உணவுகளை அறவே தவிர்ப்பாராம்.

வடிவேலு பேமஸ் டயலாக்குகள்

பொதுவாக படத்தின் ஹீரோ அல்லது வில்லன் பேசும் வசனங்கள் பிரபலமடைவது வழக்கமான விஷயம். ஆனால் காமெடியனான வடிவேலுவின் பல டயலாக்குகளில் அன்றாட வாழ்வில் பொருந்தும் விஷயங்களாகவே மாறியுள்ளன.

அப்படி பார்க்கையில் வடிவேலு பேசிய பிரபலமான வசனங்களாக

‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’ -வின்னர்

"என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு" - வின்னர்

"வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்" - வின்னர்

"போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது" - வின்னர்

"மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு" - சந்திரமுகி

"ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு" - சீனாதானா 001

"நான் அப்படியே சாக் ஆயிட்டேன்" - கிரி

"க க க போ…"- இம்சை அரசன் 23ம் புலிகேசி

"பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு" - கிரி

"பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்டு வீக்கு" - தலைநகரம்

“பெண்கள் மூன்று வகை. ஜில் ஜங் ஜக்” - காதலன்

“பிளான் பண்ணி பண்ணனும்” - போக்கிரி

“எரியுதடி மாலா” - மிடில் கிளாஸ் மாதவன்

இன்னும் பல வசனங்களை சொல்லிக்கொண்டே பேகலாம். ஒரு நாளில் ஒரு தடவையாவது வடிவேலு வசனத்தை பயன்படுத்ததாக நபர்களே இல்லை என்கிற அளவில் அவ்வளவு எதார்த்தமான வசனங்களை பேசி மக்கள் மனதில் நடிகர் வடிவேலு நீக்கமற நிறைந்திருக்கிறார்.

மீம்ஸ்களின் நாயகன்

அரசியல் பேச்சு காரணமாக சிக்கலில் மாட்டிக்கொண்ட வடிவேலு சில காலம் சினிமா துறையினரால் ஒதுக்கப்பட்டார். ஒரே ஆண்டில் 20 படங்களுக்கு மேல் நடித்து வந்த அவர், 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் விரல் விட்டு என்னும் அளவில் மட்டுமே படங்களில் நடித்திருந்தார்.

என்னதான் சினிமாத்துறையினர் அவரை புறக்கணித்தாலும், இணையவாசிகள் மீம்ஸ்களின் வழியே வடிவேலுவை கொண்டாடினார். எதற்கெடுத்தாலும், எந்த சூழ்நிலையிலும் ஏதாவது வடிவேலு காமெடியை பொருத்து அவரை புகழை மங்க விடாமல் பார்த்து கொண்டனர். மீம்ஸ் என்ற இணையவழி கார்டூன்களுக்கு உயிர் கொடுத்ததில் வடிவேலுவின் பங்கு அளப்பறியது.

தலைநகரம் படத்தில் "எனக்காடா எண்ட் கார்டு போடுரீங்க, எனக்கு எண்டே இல்லடா" என வடிவேலு பேசும் வசனம் வரும். அதை மெய்யாக்குவதுபோல் பிளாக் அண்ட் காலத்தின் பெரிசுகள் முதல் ஜென் இஸ்ட் சிறுசுகள் வரை சிரிப்பலை வரைவழைக்கும் காமெடி நாயகனாக இருந்து வரும் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.