Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: சாதி குறித்து பேசிய நடிகர் கலையரசன்-actor kalaiyarasan said that closed to director pa ranjith did not invite me in many places and it is ugly - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: சாதி குறித்து பேசிய நடிகர் கலையரசன்

Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: சாதி குறித்து பேசிய நடிகர் கலையரசன்

Marimuthu M HT Tamil
Aug 20, 2024 09:17 PM IST

Pa Ranjith:‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’என நடிகர் கலையரசன் பேட்டியளித்துள்ளார்.

Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: நடிகர் கலையரசன்
Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: நடிகர் கலையரசன்

இந்நிலையில் இப்படம் தொடர்பாக நடிகர் கலையரசன் குமுதம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி மற்றும் பதில் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தங்கலான் படத்தில் நீங்க இல்லை. தங்கலான் படம் பார்த்திட்டீங்களா?

தங்கலான் படம் பார்த்துட்டேன். எனக்கு செகண்ட் ஆஃப் ரொம்ப பிடிச்சிருந்தது. இன்டர்வெல் முன்னாடி, கொஞ்சம் ஸ்லோவானது மாதிரி இருந்தது. படமாக பிடிச்சிருந்தது. நடிகர்கள் நடிச்சிருந்த விதம், பார்வதி சீன் பை சீன் பயங்கரமாக நடிச்சிருக்காங்க. வெவ்வேறு காலகட்டத்தில் விக்ரம் சார் பயங்கரமாக நடிச்சிருக்காரு. எல்லோருமே நல்லா பண்ணியிருக்காங்க. செகண்ட் ஆஃப் சீக்கிரமே நடிச்சது மாதிரி ஃபீல் ஆனது.

மெட்ராஸ் படத்தில் நடிச்ச ஜானி ஹரி கிருஷ்ணன் வந்து ரஞ்சித் படங்களில் தான் நடிக்க முடியுதுன்னு ஒரு பிராண்டிங் பண்ணப்படுது. அதைப் பற்றி?

இங்க என்ன சொல்றாங்கன்றது மீறி, யார் சொல்றாங்கன்ற பிரச்னை இருக்கு. அடையாளப்படுத்தப்படுது. அது எனக்கு நடந்திருக்கு. ரஞ்சித் சாருக்கு நெருக்கம்ங்கிறதால், என்னை பல இடங்களுக்கு அழைக்காம இருந்திருக்காங்க. வேலையை வேலையாகப் பார்க்காமல், இதை சமூகத்தில் பேசும்போது அசிங்கமாகத் தான் இருக்கு. ரஞ்சித் டீமில் அப்படி எல்லாம் கேங் கிடையாது. சார்பட்டாவில்  பல தரப்பட்ட மக்கள் நடிச்சிருக்காங்க. சொல்றவங்க நல்ல கருத்து யார் சொன்ன என்ன அப்படின்னு எல்லாம் யோசிக்க மாட்டியுறாங்க.. நீ ஏன் சொல்ற.. அப்படின்னு தான் யோசிக்குறாங்க.. அது சினிமாவில் ரொம்ப ஆழமாகவே இருக்கு. அதையெல்லாம் மீறி, நம்ம நம்புறது அந்த கலையைத் தான். எல்லோருக்கும் வெற்றிவரலாம். போகலாம். தோத்துட்டா கூட எழுந்திருக்க வாய்ப்பு கிடைக்கலாம். நமக்கு அப்படி கிடையாது. மனிதர்கள் எல்லோருமே சமம்னு நம்புறேன். அது மொழி, சாதி, மதம், நாடு எப்படி பிரிச்சாலுமே நான் தவறுன்னுதான் சொல்வேன். வலிங்கிறது எல்லோருக்கும் ஒன்னு தான். சந்தோஷம்ன்னாலும் எல்லோருக்கும் ஒன்னு தான். 

நாம் நமக்கு கொடுக்கிற வேலையை நேர்மையாக மதிச்சு செஞ்சோம் என்றால் 100 விழுக்காடு, அது நமக்கு நன்மை செய்யும். ரஞ்சித் சார் டீமில் இருக்கிறதுனால, என்னை கூப்பிடாமல் சிலர் இருக்காங்க. அது அவங்ககிட்ட தான் பிரச்னைன்னு நினைக்கிறேன். 

’வாழை’ படத்தில் மாரிசெல்வராஜூடன் முதன்முறையாக இணைந்து பயணித்தது எப்படி இருந்தது?

’வாழை’ எனக்கு முக்கியமான படமாக இருக்கும். பெர்ஷனலா, ஒரு நடிகராகவே பெரிதாக கற்றுக்கொள்ள முடிந்தது. வித்தியாசமான அனுபவம். புது கதைக்களம், புது ஸ்லாங். அங்க இருக்கிற லைஃப், உலகம், எல்லாமே எனக்கு புதுசு. நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். வாழைத்தாருக்குப் பின்னாடி, அவ்வளவு கதைகள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். 

வாழைப் படத்தில் இருக்கும் வாழைத்தாருக்குப் பின் கதை உருவாக்கப்பட்டுள்ளதா?

வாழைத்தார் எடுக்கும் மக்களின் வலி நிறைந்த கதை அது. உழைப்புக்குத் தகுந்த கூலி அவர்களுக்கு கிடைக்காதுன்னு ஒன்று இருக்கு. பரியேறும் பெருமாளிலேயே வாழை மரங்கள் சுற்றிலும் இருக்கிறமாதிரியான சில காட்சிகள் இருக்கும். வாழை என்பது இந்தப் படத்தில் இருக்கும் மக்களின் வாழ்வோடு கலந்து இருப்பது. வாழைத்தார் ஏத்துறதுக்காக லாரியில் போறது, அங்கிருப்பவர்களின் செலிபிரேஷன், லீவு நாட்களில் அங்கிருக்கும் மாணவர்கள் பெற்றோர் சொல்றாங்கன்னு போய், வாழைத்தார் சுமக்கும் சூழல் நிலவுவது, அது அவர்களுக்குப் பிடிக்காது. அது ஒரு தனி உலகம் தான். 

வாழை இயக்குநர் மாரிசெல்வராஜ் சிறுவனாக இருக்கும்போது நிகழ்ந்த கதை. அது இந்த காலத்தில் எளிதாக மக்களால் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியுமா?

ஈஸியாக எல்லோர்ன்னாலயும் வாழைப் படத்தை தொடர்புபடுத்திக்கிற முடியும். நாங்க படத்துக்காக வாழைத்தார் ஏத்திட்டு இருக்கும்போது, நிஜமாக பக்கத்தில் வாழைத்தார் ஏத்திட்டு இருப்பாங்க. கதை ஒரு காலகட்டத்தில் நடந்த கதையாக இருந்தாலும், இப்போது இருக்கிற மக்கள் பார்க்கும்போது புதுசா உணர்வாங்க. ஒரு புதிய இடத்துக்கு பயணிச்ச உணர்வு அவங்ககிட்ட இருக்கும். படம் ஜாலியாகவும் இருக்கும். மாரி செல்வராஜ் அண்ணாவோட கதைகளிலேயே பெஸ்ட்டாக இருக்கும்.

நன்றி: குமுதம் யூட்யூப்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.