டைவர்ஸ்க்கு ஓகே சொன்ன கணவரை பழிவாங்கத் துடிக்கும் நடிகை.. என்னக் கொடுமை சார் இது!
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தன்னை விவாகரத்து செய்ய சம்மதித்த கணவர் பென் அஃப்லெக்கை பழவாங்க திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

டைவர்ஸ்க்கு ஓகே சொன்ன கணவரை பழிவாங்கத் துடிக்கும் நடிகை.. என்னக் கொடுமை சார் இது! (Getty Images via AFP)
ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ்-க்கு தமிழ் ரசிகர்களும் ஏராளம். இவரை வர்ணித்தும் புகழ்ந்தும் தமிழில் சினிமா பாடல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு இவர் நாடு கடந்து மொழிகளை கடந்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
விவாகரத்து
தற்போது 55 வயதாகும் ஜெனிபர் லோபஸ், பென் அஃப்லெக் என்பவரை திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதற்கு பென் சம்மதம் தெரிவித்த நிலையில், ஜெனிபர் லோபஸிற்கு மீண்டும் பென்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
இதற்கு பென் அஃப்லெக் மறுப்பு தெரிவித்ததால், அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகை ஜெனிபர் லோபஸ் திட்டம் தீட்டி வருவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
