Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!-a hollywood romantic movie on amazon prime acted famous actors sherilyn fenn - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!

Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!

Manigandan K T HT Tamil
Sep 09, 2024 04:02 PM IST

Amazon Prime: அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.

Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!
Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!

கதை என்ன?

ஏப்ரல் டெலோங்ப்ரே ஒரு பணக்கார குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் மரியாதைக்குரிய குடும்பத்தின் வாரிசு ஆவார். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, ஏப்ரல் டெலோங்ப்ரே தனது வருங்கால கணவரான சாட் டக்ளஸ் ஃபேர்சைல்ட் உடனான தனது திருமணத்திற்கு தயார் ஆவதற்காக தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்புகிறார். ஒரு சர்க்கஸ் நடத்தும் குழு நகரத்திற்கு வரும்போது, ​​ பெர்ரி டைசன் என்பவரைப் பார்த்து காதல் வயப்படுகிறார். அதைத் தொடர்ந்து இருவருக்கு காதல் பற்றிக் கொள்கிறது.

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொள்ளும் பாட்டி, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இருவருக்கும் இடையே சில சமயங்களில் சண்டை சச்சரவுகள் வருகிறது. ஆனாலும், அவர்களின் காதல் மட்டும் குறையாமல் மீண்டும் இணைகின்றனர்.

மெதுவாக நகரும் திரைக்கதை

அதேநேரம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. காதலிப்பவரை மணந்தாரா, அல்லது வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்து கொள்கிறாரா என்பது தான் மீதிப் படம். 

மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்தைப் பார்க்கும்போது தொய்வை தருகிறது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி முழுவதும் படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ரிட்டர்ன் டு மூன் ஜங்ஷன் என்ற ஒரு sequel படமும் வெளியானது. லூயிஸ் பிளெட்சர் மட்டுமே அதன் தொடர்ச்சியில் மீண்டும் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.

ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. எனவே, இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது. அமேசான் பிரைமில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது. படத்திற்கான தலைப்புக்கான அர்த்தம் படத்தை பார்த்து முடித்ததும் புரியும்.

1988 கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள் விழாவில் பங்கு பெற்ற இந்தப் படம் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றது. அந்த விருதை Kristy McNichol பெற்றார்.

இந்தப் படத்தில் நடித்த கதாநாயகி, ஷெரிலின் ஃபென், ட்வின் பீக்ஸ் (1990-1991, 2017) என்ற தொலைக்காட்சி தொடரில் கற்பனை கதாபாத்திரமான ஆட்ரி ஹார்னாக நடித்தார், அதற்காக அவர் கோல்டன் குளோப் விருது மற்றும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அவர் வைல்ட் அட் ஹார்ட் (1990), ஆஃப் மைஸ் அண்ட் மென் (1992), பாக்ஸிங் ஹெலினா (1993) மற்றும் தி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் லேலண்ட் (2003) ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார், மேலும் ரூட் அவேக்கனிங் (1998-2001), ஷேம்லெஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.