ஸ்ட்ரீ 2, காதர் 2, அனிமல் சாதனையை முறியடித்த புஷ்பா 2 .. 12 ஆம் நாளில் கைப்பற்றிய வசூல் விவரம் இதோ!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த படம் வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. 12 நாளில் புஷ்பா 2 திரைப்படம் கைப்பற்றிய வசூல் குறித்து இதில் காண்போம்.
தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை புரிந்துள்ளது.
புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்தது. மேலும் புஷ்பா 2 படமே இதுவரை அதிக வசூல் செய்த படமாகும். இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
11 நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல்
ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவியூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்த்து இவ்வளவு வசூல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், 11 நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல் Sacnilk.com கூற்றுப்படி, படி, "புஷ்பா 2 ரிலீசான 11வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 986.3 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்தி மொழியில் 55 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்துள்ளது
மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 11வது நாளில் ரூ.1196.3கோடி வசூலை ஈட்டியுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குவித்து வருகிறது.
12 நாளில் புஷ்பா 2 திரைப்படம் கைப்பற்றிய வசூல்
புஷ்பா 2 தி ரூல் ஆரம்ப மதிப்பீடுகளின்படி 12 ஆவது நாளில் ரூ. 27.75 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுவரை படத்தின் குறைந்த ஒரு நாள் வசூல் இதுவாகும். இப்படம் திரையரங்குகளில் முதல் வார முடிவில் ரூ. 725.8 கோடியை வசூலித்தது. இரண்டாவது சனிக்கிழமை புஷ்பா 2 ரூ.63.3 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.76.6 கோடியும் வசூலித்துள்ளது. 12-வது நாள் வசூலை கணக்கில் எடுத்துக்கொண்டால், புஷ்பா 2 இப்போது இந்தியாவின் மொத்த வசூலை ரூ. 929.85 கோடியாக உயர்ந்துள்ளது.
புஷ்பா 2 ஏற்கனவே உலகளவில் ரூ.1000 கோடியைக் கடந்துவிட்டது, இப்போது அதிக வசூல் செய்த முதல் 10 இந்திய படங்களில் ஒன்றாகும். உள்நாட்டில் ரூ.165 கோடி நிகர மற்றும் உலகளவில் ரூ. 294 கோடி வசூலித்தது. அதிரடி பொழுதுபோக்கு படமான ஸ்ட்ரீ 2, காதர் 2, அனிமல் மற்றும் ஜவான் ஆகியவற்றையும் பின்னுக்குத் தள்ளி இந்தி பாக்ஸ் ஆபிஸில் அதிக இரண்டாவது வார வசூல் செய்த படமாக புஷ்பா 2 மாறியுள்ளது.
Sacnilk இன் கூற்றுப்படி, 12வது நாளில் தெலுங்கில் ரூ.5.45 கோடியும், தமிழில் ரூ.1 கோடியும், கன்னடத்தில் ரூ.15,00,000ம், மலையாளத்தில் ரூ.15,00,000ம் வசூலித்துள்ளது. இந்தியில் இப்படம்ரூ.21 கோடி வசூல் செய்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்