தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Un Samayal Arayil : 'இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது’ 10 ஆம் ஆண்டில் உன் சமையல் அறையில் படம்!

Un Samayal Arayil : 'இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது’ 10 ஆம் ஆண்டில் உன் சமையல் அறையில் படம்!

Divya Sekar HT Tamil
Jun 06, 2024 06:00 AM IST

10 Years Of Un Samayal Arayil : உன் சமையல் அறையில் படம் பீல் குட் படமாக இருக்கும். பிரகாஷ் ராஜ், சினேகா நடிப்பும் அவர்கள் உணவை சுவைக்கும் போது கொடுக்கும் முகபாவனைகள் ஆகட்டும் அனைத்தும் அட்டகாசமாக இருக்கும். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

 'இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது’  10 ஆம் ஆண்டில் உன் சமையல் அறையில் படம்!
'இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது’ 10 ஆம் ஆண்டில் உன் சமையல் அறையில் படம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இத்திரைப்படம் 2014 ஜூன் மாதம் வெளியானது. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். உன் சமையலறையில் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியானது. இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்குச் ஜோடியாக முதன் முதலாக நடிகை சினேகா நடித்துள்ளார். ஊர்வசி,டேசுஸ் அச் நவீன்,சம்யுக்த ஹோர்நாத்,பூர்ணா, தம்பி ராமையா, இளங்கோ குமரவேல், ஐசுவரியா என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை

இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளரான பிரகாஷ்ராஜ் காளிதாசன் என்ற கதாபத்திரத்தில் நடித்து இருப்பார். காளிதாசன் நடுத்தர வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தூரத்து உறவுக்காரரான வைத்தியுடன் வசித்துவரும் காளிதாசன், பயங்கரமான உணவு பிரியர். ஒவ்வொரு உணவையும் ரசித்து சாப்பிடக்கூடியவர். அது எந்த அளவிற்கு என்றால் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்ற வீட்டின் சமையல்காரர் கிருஷ்ணா சுவையாக சமைக்கிறார் என்பதற்காகத் தன் வீட்டிற்கு அழைத்து வரும் அளவிற்கு உணவு மீது தீரா காதல். ஒரு தவறான தொலைபேசி அழைப்பு காளிதாசிற்கு வருகிறது.

காதல் மோதலில் தான் ஆரம்பம்

அதில் ஒரு பெண் பேசிகிறார். அதுதான் நாயகி சினேகா. அவர் டப்பிங் கலைஞர். கௌரி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். காதல் மோதலில் தான் ஆரம்பம் ஆகும் என்பார்கள். அதுபோல தான் இந்த கதையும். ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் - சினேகா சண்டையிட்டுக்கொள்பவர்கள். பின்னர் இருவரும் உணவு மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் உணவு மீது இருக்கும் அதீத ஆர்வத்தால் இருவரும் பேசத் தொடங்குகிறார்கள். தொலைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள், ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், திருமண வயது என்று கருதப்படும் வயதைக் கடந்துவிட்ட இருவருக்குமே தங்கள் தோற்றத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதனால் காளிதாசன் தன் அக்கா மகன் நவீனையும், கௌரி தன் அறைத் தோழி மேக்னாவையும் முதல் சந்திப்பிற்கு அனுப்புகிறார்கள். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. குழப்பம் தீர்ந்து காதலர்கள் இணைந்தார்களா, நவீனும் மேக்னாவும் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஹிட் பாடல்

இப்படத்தில் இடம்பெற்ற  ”இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது

அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது

தாமிரபரணி திருநெல்வேலி சோதியில ஒரு தனிருசி

வைகையில் புடிச்ச ஆயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி

திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு

தென்காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு

அம்மாவின் வாசம் முன்பு வேப்பம்பூ கொழம்புக்கு

அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு

உணவிலே ஒரு உறவு இருக்குது

உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது” இந்த பாடல் செம ஹிட். குறிப்பாக இப்பாடலில் வரும் காட்சிகள் பார்போரை நாக்கில் எச்சில் ஊறவைக்கும். உணவு மீதான ஆர்வத்தை நமக்கு தூண்டும்.

10 ஆம் ஆண்டில் உன் சமையல் அறையில்

இப்படம் ஒரு பீல் குட் படமாக இருக்கும். பிரகாஷ் ராஜ், சினேகா நடிப்பும் அவர்கள் உணவை சுவைக்கும் போது கொடுக்கும் முகபாவனைகள் ஆகட்டும் அனைத்தும் அட்டகாசமாக இருக்கும். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்