Election 2024: ’பாஜக 400 ஜெயிக்குமா? 250 தாண்டுறதே கஷ்டம்!’ புள்ளி விவரங்களுடன் விளாசும் பத்திரிக்கையாளர் சமஸ்!
“பாஜக கடந்த முறை வென்ற தொகுதிகளை காட்டிலும் கூடுதலாக வெற்றி பெறுவதற்கான சூழல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே உள்ளது”

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியாது என மூத்த பத்திரிக்கையாளர் சமஸ் கூறி உள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கூட பாஜகவால் வெல்ல முடியாது என மூத்த பத்திரிக்கையாளர் சமஸ் கூறி உள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்து உள்ள நேர்காணல் ஒன்றில், “பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்லும் என பேசுவது, ஒரு உளவியல் தாக்குதல். கடந்த 2019ஆம் ஆண்டில் பாஜக மட்டும் 303 இடங்களை வென்று இருந்தனர். அந்த இடங்களை தற்போது வெல்வதே அவர்களுக்கு சிரமம். பாஜகவால் 225 முதல் 250 வரையிலான இடங்களை பெற முடியும்.
பாஜக இன்று 12 மாநிலங்களில் நேரடியாகவும், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் ஆகிய 2 பெரிய மாநிலங்களில் கூட்டணி மூலமும் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களில் நடைபெறும் ஆட்சியில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.