Lok sabha Election 2024: ‘பாஜகவின் 400+ படம்! முதல் நாளிலேயே ப்ளாப்!’ கலாய்த்துவிட்ட தேஜஸ்வி!
”அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படுவோம்”
பீகாரில் நேற்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 4 மக்களவைத் தொகுதிகளிலும் மகாகத்பந்தன் வெற்றி பெறும் என்று கூறிய ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், பாஜகவின் ”400 பிளஸ்” என்ற திரைப்படம் சூப்பர் ப்ளாப் ஆகிவிட்டதாக கிண்டல் செய்து உள்ளார்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இது தொடர்பாக பேசி உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், "அவர்களின் (பாஜக) '400 பிளஸ்' திரைப்படம் வாக்குப்பதிவின் முதல் நாளிலேயே சூப்பர் ஃப்ளாப்பாக மாறிவிட்டது. பீகாரில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறினார்.