Election 2024: ’கடலில் முகத்தை காட்டியவர்! மக்களுக்கு முதுகை காட்டிவிட்டார்! பாஜக 140 சீட் கூட தாண்டாது!’ அகிலேஷ் யாதவ்!
Election 2024: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வது குறித்து விமர்சனம் செய்த அகிலேஷ் யாதவ், ’கடலை நோக்கி அமர்ந்திருப்பவர் பொது மக்களுக்கு முதுகு காட்டி விட்டார்’ என விமர்சித்தார்.

Election 2024: ’கடலில் முகத்தை காட்டியவர்! மக்களுக்கு முதுகை காட்டிவிட்டார்! பாஜக 140 சீட் கூட தாண்டாது!’ அகிலேஷ் யாதவ்! (File Photo) (HT_PRINT)
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் 140 இடங்களை கூட தாண்ட முடியாது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவத்திடம் அவர் அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் பின்னர் மத்தியில் இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வது குறித்து விமர்சனம் செய்த அவர், "கடலை நோக்கி அமர்ந்திருப்பவர் பொது மக்களுக்கு முதுகு காட்டி விட்டார் என்பதே உண்மை. மக்களும் அவர்களுக்கு எதிராக உள்ளனர். '400 பார்' என்றால் என்ன? அவர்களால் பாஜக பாஜகவால் 140 ரன்களைத் தாண்ட முடியாது" என்று கூறினார்.
