Fact Check : பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என கூறி கூறி பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு? இது உண்மையா?
Fact Check : பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று கூறி கூறி பாஜக தொண்டர் ஒருவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண:
மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் திரும்ப திரும்ப எஸ் பார் சாசோ பார் என்று இந்தியில் எதையோ குறிப்பிடுகிறார். நிலைத் தகவலில், “பாஜகவுக்கு 400 சீட்டு என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிய நபர். பாஜகவுக்கு 400 சீட்டு என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிய நபர்; மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதே போன்று மாலை மலர் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருந்தது.