தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

Kathiravan V HT Tamil
May 14, 2024 08:12 PM IST

”Modi: சொந்தமாக கார், நிலம் ஏதும் இல்லை என்றும், மனைவியின் பான் எண் குறித்து ஏதும் தெரியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது வேட்புமனுவில் கூறி உள்ளார்.”

கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!
கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்! (BJP)

ட்ரெண்டிங் செய்திகள்

வாரணாசியில் மூன்றாவது முறை களம் இறங்கும் மோடி

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையமாக உள்ள காசியில் (வாரணாசியின் பழைய பெயர்) இருந்து நரேந்திர மோடி தேர்தலில் களம் இறங்குவது இது மூன்றாவது முறையாகும்.

வேட்புமனுத்தாக்கலுக்கு முன் நடந்த வழிபாடு!

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி புனித கங்கை நதிக்கரையில் உள்ள சின்னமான தசாஸ்வமேத படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பழமையான கால பைரவர் கோயிலுக்கும் சென்றார். தசாஸ்வமேத படித்துறையில் பிரதமர் மோடி ஆரத்தி நடத்தினார்.

கங்கை நதி படித்துறையில் வழிபட்ட பின்னர், பிரதமர் மோடி நமோ படித்துறைக்கு சொகுசு கப்பலில் சென்றார். அங்கு அவர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்தார்.

காசி உடனான மோடியின் உறவு!

மோடியுடன் யோகி ஆதித்யநாத் கோவிலுக்கு வந்தார். பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி காசியுடனான தனது உறவு "ஒப்பிட முடியாதது" என்று எழுதினார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு 

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள வீட்டு முகவரியில் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். 

தனது பான் எண்ணை குறிப்பிட்டு 2018-19 முதல் 2022-23ஆம் ஆண்டு வரையிலான வருமான வரி குறித்த விவரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

தனக்கு ஜசோதாபென் என்ற மனைவி உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரது மனைவியின் பான் எண் மற்றும் நிதி விவரங்கள் குறித்து ஏதுவும் தெரியாது என கூறி உள்ளார். 

52 ஆயிரத்து 920 ரூபாய் ரொக்கம் தற்போது வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் 73 ஆயிரத்து 304 ரூபாயும், வாரணாசியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் 7 ஆயிரம் ரூபாயும் உள்ளதாக கூறி உள்ளார். 

மேலும் 2 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரத்து 338 ரூபாய் மதிப்புள்ள பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வைத்து உள்ளதாக கூறி உள்ளார். 

மேலும் NSC சேமிப்பில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 398 ரூபாய் உள்ளதாகவும், மேலும் 2 லட்சத்து 67 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும் கூறி உள்ளார்.  

மொத்தமாக தன்னிடம் 3 கோடியே 02 லட்சத்து 06 ஆயிரத்து 889 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாக கூறி உள்ளார். 

பிரதமர் அலுவலகம் மூலமாகவும், வட்டித் தொகை மூலமாகவும் பிரதமர் கூறி உள்ளார். 

1967ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி முடித்ததாகவும், 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்தாகவும், 1983ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்ததாகவும் தனது கல்வித் தகுதி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதிக்கு வரும் ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

WhatsApp channel