Congress Manifesto: வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? - விபரம் இதோ!
Lok Sabha elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.
2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை.
மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் புதிய ஜிஎஸ்டி 2.0 ஏற்றப்படும்.
மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும்.
மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும்.
அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டக் கூலி 400 ஆக உயர்த்தப்படும்.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் அக்னி பத் திட்டம் ரத்து செய்யப்படும்15. எம் எல் ஏ அல்லது எம்பி கட்சி தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும்.
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது.
நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய துறை ஆணையம் அமைக்கப்படும்.
நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும்.
பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்.
அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
மாநிலங்கள் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளவை!
பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்