Rahul Gandhi Declares Assets: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு தெரியுமா?
Rahul Gandhi Declares Assets: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Rahul Gandhi Declares Assets: 2024 மக்களவைத் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர்களில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் (சிபிஐ) அன்னி ராஜா ஆகியோர் நேற்று(ஏப்ரல் 03) வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து அன்னி ராஜா போட்டியிடுகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4-ம் தேதியான நேற்று கடைசி நாள் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் சொத்துக்களில் ரூ.3.8 கோடி மியூச்சுவல் பண்ட் முதலீடுகள்:
ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் பங்குச் சந்தை முதலீடுகளாக மொத்தம் ரூ .4.3 கோடி, பரஸ்பர நிதி முதலீடு என்னும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக ரூ .3.81 கோடியும்; வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம் வைத்திருக்கிறார்.
கூடுதலாக, 53 வயதான தலைவரான ராகுல் காந்தி, ரூ.55,000 ரொக்கமாக கையில் வைத்திருக்கிறார். 2022-23ஆம் நிதியாண்டில் ராகுல் காந்தி மொத்த வருமானம் ரூ .1,02,78,680 (ரூ.1.02 கோடி) என்றும் அறிவித்தார்.
ராகுல் காந்தியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.9.24 கோடி, இதில் ரூ.15.2 லட்சம் மதிப்புள்ள தங்க பத்திரங்களும் அடங்கும்.
மேலும், தேசிய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் சேமிப்பு, காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் பிறவற்றில் மொத்தம் ரூ .61.52 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20 கோடி ஆகும். ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என பிரமாணப்பத்திரத்தில் காட்டப்பட்டுள்ளது.
டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள பிரியங்கா காந்தியின் ரூ.11 கோடி மதிப்புள்ள அலுவலக இடத்தில், ராகுல் காந்திக்கும் பங்கு இருக்கிறது.
ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.20.4 கோடி
அசையும் சொத்துகள்: ரூ.9.24 கோடி;
அசையாச் சொத்துகள்:11.15 கோடி;
கடன்கள்: ரூ.49.7 லட்சம்; ராகுல் காந்தி மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019ஆம் ஆண்டு ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு - 15.89 கோடி ஆகும்.
ராகுல் காந்தியிடம் ரூ.4.3 கோடி பங்குகள்
ராகுல் காந்தியிடம் ரூ.4.3 கோடி பங்குகள் நிலுவையில் உள்ளன. ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், தீபக் நைட்ரைட், திவிஸ் லேபாரட்டரீஸ், டாக்டர் லால் பாத்லேப்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோ எட்ஜ் (இந்தியா) லிமிடெட், இன்போசிஸ், எல்டிஐ மைண்ட்ட்ரீ லிமிடெட், நெஸ்லே இந்தியா, பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன் கம்பெனி, வினைல் கெமிக்கல்ஸ் (இந்தியா) லிமிடெட் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் ராகுல் காந்தியின் பங்குகளை வைத்துள்ளன.
அன்னி ராஜாவின் சொத்து மதிப்பு:
வயநாடு தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அன்னி ராஜாவுக்கு ரூ.72 லட்சம் அசையாச் சொத்துகள் இருக்கிறது. அன்னிராஜா தன் கையில் ரூ.10,000 ரொக்கம், ரூ.62,000 வங்கி டெபாசிட், ரூ.25,000 மதிப்புள்ள நகைகள், ரூ.71 லட்சம் மதிப்புள்ள பரம்பரை சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னி ராஜாவின் மொத்த சொத்துகள்: ரூ.1.61 கோடி ஆகும்
அசையும் சொத்துகள்: ரூ.89 லட்சம்
அசையாச் சொத்துகள்: ரூ.72 லட்சம் ஆகியவை உள்ளது. ஆனால், இவர் மீது எந்தவொரு வழக்கும் இல்லை.
வயநாடு மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, சிட்டிங் எம்.பி ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்தார்.
இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 26-ம் தேதி வயநாட்டில் தேர்தல் நடக்கிறது.
டாபிக்ஸ்