தமிழ் செய்திகள்  /  Elections  /  Cong Promises <Span Class='webrupee'>₹</span>1 Lakh Cash Transfer To Women 50 Pc Quota In Central Govt Jobs

Congress Promises: ’இதான் வாக்குறுதி!’ மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு! காங். அறிவிப்பு

Kathiravan V HT Tamil
Mar 13, 2024 02:24 PM IST

“Congress Promises: கட்சியின் "மகாலட்சுமி" உத்தரவாதத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது”

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஒரு லட்சம் நேரடி பணப் பரிமாற்றம் மற்றும் மத்திய அரசு பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உட்பட பெண்களுக்கு ஐந்து உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தள பதிவில்,   காங்கிரஸ் கட்சி "நாரி நியாய்" உத்தரவாதத்தை அறிவித்துள்ளது. இது நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வில் புதிய நிகழ்வுகளை அமைக்கப்போகிறது என கூறி உள்ளார். 

இதற்கு முன்னதாக, பங்கேற்பு நீதி, உழவர் நீதி மற்றும் இளைஞர் நீதிக்கான உத்தரவாதங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளதையும் எனவும் கார்கே நினைவுக்கூர்ந்தார். 

"எங்கள் உத்தரவாதங்கள் வெற்று வாக்குறுதிகள் அல்ல என கூறி உள்ள அவர், எங்கள் வார்த்தைகள் கல்லில் பதிக்கப்பட்டுள்ளன. இதுவே 1926-ம் ஆண்டு முதல் இன்று வரை, எங்கள் எதிரிகள் பிறந்தபோது, நாங்கள் அறிக்கைகளை உருவாக்கி, அந்த அறிவிப்புகளை நிறைவேற்றி வருகிறோம்.

"நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து அளித்து, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றும் இந்த போராட்டத்தில் எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்" என்று கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் துலேயில் நடைபெற்ற "மகளிர் மாநாட்டில்" காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கட்சியின் "மகாலட்சுமி" உத்தரவாதத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

"ஆதி ஆபாடி, பூரா ஹக்" என்பதை காங்கிரஸ் உறுதி செய்யும், இதன் கீழ் மத்திய அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

"சக்தி கா சம்மான்" உத்தரவாதத்தின் கீழ், ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவுப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மையத்தின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும் என்று கார்கே கூறினார்.

"அதிகார மைத்ரி" என்ற உத்தரவாதத்தின் கீழ், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் "பெண் அதிகாரி" ஒருவரை காங்கிரஸ் நியமித்து, சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி பெண்களுக்குக் கற்பிப்பதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதில் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு சட்டப்பூர்வ செயல்பாட்டாளராக பணியாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"சாவித்ரி பாய் ஃபுலே விடுதிகள்" உத்தரவாதத்தின் கீழ், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒன்று இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் நாடு முழுவது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்திக்க அக்கட்சி தயார் ஆகி வருகிறது.  ஏற்கெனவே தேர்தலுக்கு தயாராகும் வகையில் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel