தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Kanimozhi: 'பிரதமர் தமிழ்நாட்டிலே தங்கினாலும் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது' - சூசகமாக பேசிய கனிமொழி எம்.பி!

Kanimozhi: 'பிரதமர் தமிழ்நாட்டிலே தங்கினாலும் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது' - சூசகமாக பேசிய கனிமொழி எம்.பி!

Karthikeyan S HT Tamil
Apr 04, 2024 06:42 AM IST

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக விளாத்திகுளத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கனிமொழி பேசியுள்ளார்.

கனிமொழி
கனிமொழி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவர் அவர்களது வீடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம், மகளிர் அனைவரும் கட்டணம் இன்றி பயணம் செய்ய பேருந்து வசதி திட்டம், ஏழை மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த காலை உணவு திட்டத்தை தற்போது கனடா நாடு தங்களது நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல்வேறு நாடுகள் பின்பற்றத்தக்க வகையிலான மகத்தான நலத்திட்டங்களை திமுக அரசு வழங்கி வருகிறது.

'திராவிட மாடல்' என்றதும் பாஜகவினருக்கு நடுக்கம் வந்து விடுகிறது. தமிழ் மொழி, திராவிடம் என்றாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை.மாறாக தற்போது தேர்தல் வருவதால் பிரதமர் மோடி வாரத்திற்கு 5 முறை தமிழகத்திற்கு வருகிறார். தமிழையும் தமிழ் மக்களையும் புகழ்ந்து பேசி நான் தமிழனாக பிறந்திருக்கலாமே என்றெல்லாம் நாடகமாடி வருகிறார். ஆனால் மழை வெள்ளம் காலங்களில் நேரில் வந்து மக்களை பாா்க்காமலும் நிவாரணத் தொகையும் வழங்காமலும் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார். பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் பாஜகவுக்கு வாக்கு கிடைக்காது. 

பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், டோல்கேட்டுகள் மூடப்படும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக மாற்றப்பட்டு ஊதியமாக ரூ.400 வழங்கப்படும்." இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு அன்புராஜன், மத்திய ராமசுப்பு,கிழக்கு சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ்,துணைத் தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட நகர ஒன்றிய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானர் கலந்து கொண்டனர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9   

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.