தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Yuzvendra Chahal: "மறையும் சூரியன் உதிக்கும்!" "ஆமா நாளை உதிக்கும்" - வைரலாகும் ரோஹித்தின் பழைய டுவிட்

Yuzvendra Chahal: "மறையும் சூரியன் உதிக்கும்!" "ஆமா நாளை உதிக்கும்" - வைரலாகும் ரோஹித்தின் பழைய டுவிட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2023 01:11 PM IST

ஆசிய கோப்பை தொடரில் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் ஸ்பின்னரான யஸ்வேந்திர சஹால் டுவிட் பதிவுக்கு பதிலாக இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பழைய டுவிட் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் ஸ்பின்னர் யஸ்வேந்திர சாஹல்
இந்திய அணியின் ஸ்பின்னர் யஸ்வேந்திர சாஹல்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து அணியில் முக்கிய ஸ்பின்னராக இருந்து வந்த யஸ்வேந்திர சஹால் நீக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்த ஒரே வலது கை ஸ்பின்னரான அவர் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அணியில் இருக்கும் ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் ஆகிய மூவரும் இடது கை ஸ்பின்னர்களாக உள்ளனர்.

தனது நீக்கம் குறித்து குறியீட்டை வெளிப்படுத்தும் விதமாக டுவிட் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் சூரியன் மறைவது போன்ற எமோஜியும் அதிலிருந்து அம்புக்குறியிட்டு சூரியன் பிரகாசமாக இருப்பது போன்ற எமோஜியும் இடம்பெறும் விதமாக சஹால் பதில் இருந்தது.

இதன் மூலம் மறையும் சூரியின் விரைவில் உதிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக அவர் இவ்வாறு பகிர்ந்திருந்தார். இதற்கு "சூரியன் நாளை மீண்டும் உதிக்கும்" என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பதிவிட்ட பழைய டுவிட் சஹாலை ஆறுதல் படுத்தும் விதமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வைரலாகும் ரோஹித் ஷர்மா டுவிட்
வைரலாகும் ரோஹித் ஷர்மா டுவிட்

விராட் கோலி கேப்டன்சியின் முக்கிய வீரராக இருந்து வந்த சாஹல் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 72 ஒரு நாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தற்போது நல்ல பார்மில் அவர் இருந்த வந்த போதிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முன்னதாக சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பற்றி ரோஹித் ஷர்மா கூறியதாவது: "இந்திய அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதுதான் அணிக்கு நல்லது.

அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8வது அல்லது 9வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சு மூலம் சஹாலுக்கு வாய்ப்பு முழுமையாக அடைக்கப்படவில்லை எனவும், அவர் ஆசிய கோப்பை தொடருக்கு அடுத்தபடியாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராந ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படலாம் எனவும் தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point