HT Cricket Special: சீண்டிய பிளின்டாப், சீறிய யுவராஜ்..மறக்க முடியுமா சிக்ஸர் மழை! கிரிக்கெட் முக்கிய நிகழ்வுகள் இன்று
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: சீண்டிய பிளின்டாப், சீறிய யுவராஜ்..மறக்க முடியுமா சிக்ஸர் மழை! கிரிக்கெட் முக்கிய நிகழ்வுகள் இன்று

HT Cricket Special: சீண்டிய பிளின்டாப், சீறிய யுவராஜ்..மறக்க முடியுமா சிக்ஸர் மழை! கிரிக்கெட் முக்கிய நிகழ்வுகள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 22, 2024 02:31 PM IST

HT Cricket Special: இங்கிலாந்து பவுலர் பிராட் பந்துவீச்சில் யுவராஜ் சிங் சிக்ஸர் மழை பொழிந்த இந்த நாளை மறக்க முடியுமா? சீண்டிய பிளின்டாப்க்கு பதிலடி தரும் விதமாக சீறிய யுவராஜ் அதிரடி களியாட்டம் ஆடினார். இன்று நடந்த முக்கிய கிரிக்கெட் நிகழ்வுகள், கிரிக்கெட் வீரர்கள் பிறந்தநாள் பற்றி பார்க்கலாம்.

HT Cricket Special: சீண்டிய பிளான்டாப், சீறிய யுவராஜ்..மறக்க முடியுமா சிக்ஸர் மழை! கிரிக்கெட் முக்கிய நிகழ்வுகள் இன்று
HT Cricket Special: சீண்டிய பிளான்டாப், சீறிய யுவராஜ்..மறக்க முடியுமா சிக்ஸர் மழை! கிரிக்கெட் முக்கிய நிகழ்வுகள் இன்று

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. அதற்கு முன் கிரிக்கெட்டில் இன்று நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளின் பிளாஷ் பேக் பற்றி பார்க்கலாம்.

யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள்

டி20 கிரிக்கெட் என்றாலே இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ஒரே ஓவரில் அடித்த 6 சிக்ஸர்கள் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.

முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் இந்த சூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங்.

பிராட் வீசிய ஓவருக்கு முந்தை ஓவரை வீசிய பிளின்டாப் சிண்டல் காரணமாக கொதித்திருந்த யுவராஜ், மொத்த ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்திய ஆட்டத்தின் அந்த 19வது ஓவர் என்றைக்கும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத நினைவலையாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறது. தோனிக்கு 2011 உலகக் கோப்பை சிக்ஸர் என்றால், அவருக்கு முன்னரே யுவராஜ் சிங் என்ற பெயரை கேட்டாலே சொல்லும் விதமாக அற்புத இன்னிங்ஸை செப்டம்பர் 19, 2007இல் வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட் உலகில் டை ஆன இரண்டாவது டெஸ்ட்

இன்று இந்தியா - வங்கதேசம் இடையே டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடப்பது போல், 38 ஆண்டுகளுக்கு முன்னர் 1986இல் இதே நாளில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

வழக்கமான டெஸ்ட் போட்டியாக இது அமையாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டை ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி என்ற வரலாற்று சிறப்பையும் பெற்றது. இந்த போட்டியில் கடுமையான வெயில், ஈரப்பதம் மிக்க வானிலைக்கு மத்தியில் 8 மணி நேரத்துக்கு மேலாக பேட் செய்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் 210 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார். இவரது இந்த நிதான இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா தோல்வி அடைவதை தடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வங்கதேச அணியின் முதல் டெஸ்ட் கேப்டன்

2000ஆவது ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தை பெற்றது அப்போது கத்துக்குட்டி அணியாக வலம் வந்த வங்கதேசம். டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டிக்கு வங்கதேச டெஸ்ட் அணியின் முதல் கேப்டனாக செயல்பட்டவர் நெய்மூர் ரஹ்மான். முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் என சிறப்பாக ஸ்கோர் செய்த போதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி, 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பேட்டிங் சொதப்பிய நெய்மூர் ரஹ்மான், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய முன்னாள் கேப்டனான நெய்மூரம் ரஹ்மான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய அணியின் குறுகிய கால ஓபனர்

இந்தியாவுக்காக 2003 -04 காலகட்டத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடியவர் ஆகாஷ் சோப்ரா. ஓபனிங் பேட்ஸ்மேனான இவர் நிதான பேட்டிங்குக்கு பெயர் போனவராக இருந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து அரைசதமடித்து வாய்ப்புகளை பெற்ற இவர் பின்னர் நடந்த பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சோபிக்க தவறினார். இவரது ஓபனிங் இடத்தை சேவாக் தனது அதிரடியான ஆட்டத்தால் தக்க வைத்துக்கொண்டார்.

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கழட்டிவிடப்பட்ட ஆகாஷ் சோப்ரா தற்போது வர்ணனையாளராகவும், கிரிக்கெட் எழுத்தாளராகவும் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஓபனர்களில் ஒருவராக திகழ்ந்த ஆகாஷ் சோப்ரா இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.