Cricket World Cup SPL: சேப்பாக்கம், லாகூரில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சால் மிரட்டிய பவுலர்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Cricket World Cup Spl: சேப்பாக்கம், லாகூரில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சால் மிரட்டிய பவுலர்!

Cricket World Cup SPL: சேப்பாக்கம், லாகூரில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சால் மிரட்டிய பவுலர்!

Manigandan K T HT Tamil
Oct 04, 2023 06:40 AM IST

World Cup: ஆனால், அந்த ஆட்டத்தில் இந்தியாவே ஜெயித்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆட்டத்திலுமே குறைந்து 1 விக்கெட்டையாவது எடுத்து வந்தார்.

ஆஸி.,யைச் சேர்ந்த பவுலர் கிரெய்க்
ஆஸி.,யைச் சேர்ந்த பவுலர் கிரெய்க் (getty)

தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகக் கோப்பை வரை அதுதொடர்பான ஸ்பெஷல் கட்டுரைகளை உங்களுக்காக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வழங்குகிறது.

இந்தச் செய்தித்தொகுப்பில் நான்காவது உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் குறித்து தெரிந்து கொள்வோம்.

1987 கிரிக்கெட் உலகக் கோப்பை (அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் கோப்பை 1987 என ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக அறியப்படுகிறது) நான்காவது உலகக் கோப்பை தொடர் ஆகும். இது 1987 அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை இந்தியா மற்றும் பாக்கித்தானில் நடைபெற்றது - இது இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்பட்ட முதல் உலகக் கோப்பை தொடர் போட்டியாகும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் மட்டுமே பங்கேற்றது. ஆனால், இந்தத் தொடரில் 60 ஓவர்களுக்கு பதிலாக 50 ஓவர்கள் என குறைக்கப்பட்டது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா முதல் முறையாக சாம்பியன் ஆனது. இங்கிலாந்து ரன்னர்-அப் ஆனது. இந்தத் தொடரில் மொத்தம் 27 ஆட்டங்கள் விளையாடப்பட்டன.

இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் குறித்து பார்ப்போம். 1987 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் கிரெய்க் மெக்டர்மோட் 18 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரது ஆவரேஜ் 18.94.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை சென்னையில் விளையாடியது ஆஸ்திரேலியா.

அக்டோபர் 9ம் தேதி அந்தப் போட்டி நடந்தது. அன்றைய தினம் கிரெக் மெக்டர்மோட்டின் தினமாக ஆகிப்போனது. அந்த ஆட்டத்தில் மொத்தம் 4 விக்கெட்டுகளை ஆஸி.,க்காக எடுத்துக் கொடுத்தார் கிரெய்க். 1 ரன் வித்தியாசத்தில் ஆஸி.,தான் அந்த ஆட்டத்தில் ஜெயித்தது.

மறுபடியும் இந்தியாவுக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்தார் கிரெய்க். ஆனால், அந்த ஆட்டத்தில் இந்தியாவே ஜெயித்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆட்டத்திலுமே குறைந்து 1 விக்கெட்டையாவது எடுத்து வந்த கிரெய்க், முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை சாய்த்து மேஜிக் நிகழ்த்தினார்.

அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் தான் அது. லாகூரில் வைத்து அந்நாட்டு அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

அதற்கு முக்கிய காரணம் கிரெய்க் என்றால் அது மிகையல்ல. அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனும் அவரே என்று சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன?

ஆனால், பைனலில் அவர் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இருப்பினும், ஆஸ்திரேலியாவே சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.