CSK vs LSG Preview: சிஎஸ்கே-எல்எஸ்ஜி மோதலில் வெல்லப்போவது யார்?-பதிலடி கொடுக்கும் முனைப்பில் ருதுராஜ் படை
CSK vs LSG Preview: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஏப்ரல் 23 அன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) அணியை எதிர்கொள்கிறது. சொந்த அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் எல்.எஸ்.ஜி.யை முதல் 4 இடங்களுக்குள் கொண்டு செல்ல கே.எல்.ராகுலுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

சிஎஸ்கே-எல்எஸ்ஜி இன்று மோதல்
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி கடைசி 5 போட்டிகளில் 3-ல் தோல்வியடைந்தாலும் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணி தான் விளையாடிய 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. எல்எஸ்ஜி தனது கடைசி 5 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி நேருக்கு நேர் சாதனைகள்
சென்னை மற்றும் லக்னோ அணிகள் இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. சிஎஸ்கே அணி 1 முறையும், எல்எஸ்ஜி அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. எல்.எஸ்.ஜி.க்கு எதிராக சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் 217. சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னோவின் அதிகபட்ச ஸ்கோர் 211 ஆகும்.