தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Kkr: டெசிபலை எகிற வைத்த தோனி.. சிஎஸ்கே வெற்றிக்கு துணைநின்ற ருதுராஜ்.. கொல்கத்தாவுக்கு முதல் தோல்வி!

CSK vs KKR: டெசிபலை எகிற வைத்த தோனி.. சிஎஸ்கே வெற்றிக்கு துணைநின்ற ருதுராஜ்.. கொல்கத்தாவுக்கு முதல் தோல்வி!

Marimuthu M HT Tamil
Apr 08, 2024 11:45 PM IST

CSK vs KKR: சென்னையில் நடந்த சி.எஸ்.கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சி.எஸ்.கே அணி அபார வெற்றிபெற்றது.

சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 8, 2024 திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.
சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 8, 2024 திங்கள்கிழமை வெற்றி பெற்றனர். (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி, முதன்முதலில் கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட்டும், சுனில் நரனேவும் களமிறங்கினர். ஆனால், சால்ட் வந்த வேகத்தில் தேஷ் பாண்டேயின் பந்தில் ஜடேஜாவிடம் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின், சுனில் நரனே, ஜடேஜாவின் பந்தில் தீக்சனாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது சுனில் 27 ரன்களுடன் வெளியேறினார்.

அதன்பின், களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரகுவன்ஸி 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவிடம், எல்பிடபிள்யூ முறையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் நான்காவது ஆட்டக்காரராக ஆடிவந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், கொஞ்சம் நிதானம் காத்து ஆடினார். இருந்தாலும், முஸ்டஃபிஸுர் ரஹ்மான் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னுக்கும், ராமந்தீப் சிங் 13 ரன்களுக்கும், ரிங் சிங் 9 ரன்களுக்கும், ஆண்ட்ரூ ருஸ்ஸெல் 10 ரன்களுக்கும், ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இறுதியாக அனுகுல் ராய் 3 ரன்களுடனும், வைபவ் அரோரா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உதிரியாக 13 ரன்கள் அதிகம் கிடைத்தது. மொத்தம் 20 ஓவர் முடிவில் 9 ரன்களுக்கு 137 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவுட்டானது.

அதன்பின், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கே அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திராவும் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா அரோரா பந்தில் 15 ரன்களில் அவுட்டானார். அதன்பின், டர்ல் மிட்செல் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது, நரனே பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆனார்.அப்போது அவர் 25 ரன்கள் எடுத்திருந்தார். நான்காவது ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிவம் துபே நிதானித்து ஆடி, 18 பந்துகளில் மூன்று சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி 28 ரன்களை எடுத்திருந்தபோது, அரோராவின் பந்தில் அவுட்டானார். முன்பே களமிறங்கி இறுதிவரை வந்த அணியின் புது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நாட் அவுட் பேட்ஸ்மேனாக செயல்பட்டு, 58 பந்துகளில் 9 பவுண்டரிகளை விளாசி, 67 ரன்கள் எடுத்தார். துபே அவுட்டான பின், இறுதியாக இறங்கிய தோனி, ஒரு ரன் மட்டும் அடித்திருந்தார்.

இறுதியாக, 17.4 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றி இலக்கான 138ஐ தாண்டி, 141 ரன்கள் எடுத்தது. உதிரியாக 5 ரன்கள் கிடைத்தது.

 14 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில், கொல்கத்தா அணியை வீழ்த்தி, சி.எஸ்.கே அணி வென்றது.

IPL_Entry_Point