IPL 2024 Final,KKR vs SRH: ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோர்! தெறிக்கவிட்ட கொல்கத்தா பவுலர்கள் - சரிந்த சன் ரைசர்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2024 Final,kkr Vs Srh: ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோர்! தெறிக்கவிட்ட கொல்கத்தா பவுலர்கள் - சரிந்த சன் ரைசர்ஸ்

IPL 2024 Final,KKR vs SRH: ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோர்! தெறிக்கவிட்ட கொல்கத்தா பவுலர்கள் - சரிந்த சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 27, 2024 05:34 PM IST

ஐபிஎல் பைனலில் இதுவரை இல்லாத அளிவில் மிகவும் குறைவான ஸ்கார் எடுத்துள்ளது சன் ரைசர்ஸ் அணி. கொல்கத்தா பவுலர்கள் பவுலிங்கில் தெறிக்கவிட்ட நிலையில், சன் ரைசர்ஸ் அணி பேட்டிங் சரிந்தது. இந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் மட்டும் அடிக்கப்பட்டது.

ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்த சன் ரைசர்ஸ்
ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்த சன் ரைசர்ஸ் (PTI)

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் அப்துல் சமாத்க்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. கொல்கத்தாவின் துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சீட்டுகட்டு போல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24, ஐடன் மார்க்ரம் 20 ரன்கள் அடித்தனர்.

சன் ரைசர்ஸ் அணியில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் மட்டும் அடிக்கப்பட்டன. இந்த சீசனில் பவுர்புல்லான பேட்டிங் லைன் அப்பாக இருந்த சன் ரைசர்ஸ் அணியை தெறிக்கவிடும் பவுலிங்கில் கொல்கத்தா அணி கட்டுப்படுத்தியுள்ளது.

அந்த அணி  பவுலர்களில் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வைப்வ் அரோரா, சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

தெறிக்கிவட்ட கொல்கத்தா பவுலர்கள்

இந்த சீசனில் அட்டாக்கிங் ஓபனர்களாக இருந்த அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து தூக்கி அதிர்ச்சி கொடுத்தனர் கொல்கத்தா பவுலர்கள். இதனால் தொடக்கத்திலேயே அந்த அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. அபிஷேக் ஷர்மாவை கிளீன் போல்டு ஆக்கி வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். பக்காவான லென்த் பவுலிங்கில் ஹெட் விக்கெட்டை தூக்கினார் வைபவ் அரோரா

இதன் பின்னர் சன் ரைசர்ஸ் மற்ற பேட்ஸ்மேன்களும் கொல்கத்தாவின் துல்லிய பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியதோடு தங்களது விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

ஐடன் மார்க்ரம் ஓரளவு நிலைத்து நின்றபோதிலும், 20 ரன்களி எடுத்திருந்தபோது ஆண்ட்ரே ரசல் பந்தை அடித்து ஆட முயன்று அவுட்டானார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் நிதானம் காட்டியபோதிலும் 16 ரன் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 90 என இருந்தது. 

பேட் கம்மின்ஸ் ஆறுதல்

ஒருகட்டத்தில் சன் ரைசர்ஸ் 100 ரன்கள் அடிக்குமா என்ற நிலை இருந்தபோது கேப்டன் கம்மின்ஸ் ஆறுதல் அளிக்கும் விதமான பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் கடைசி ஓவர் வரை அவராலும் பேட் செய்ய முடியவில்லை. 24 ரன்கள் அடித்து சிக்ஸர் முயற்சியில் அவுட்டானார். 

இதன் மூலம் 113 ரன்கள் மட்டுமே எடுத்து, முழுமையாக 20 ஓவர் கூட விளையாடாமல் ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோரை சன் ரைசர்ஸ் பதிவு செய்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.