தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  T20 World Cup 2024: வெற்றியில் ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பவுலர்கள்!

T20 World Cup 2024: வெற்றியில் ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பவுலர்கள்!

Marimuthu M HT Tamil
Jun 04, 2024 02:07 PM IST

T20 World Cup 2024: கிரிக்கெட்டின் இருபது 20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் பவுலர்கள், அந்நாட்டின் வெற்றியில் ஆதிக்கம் செலுத்தினர்.

T20 World Cup: வெற்றியில் ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்க, ஆப்கானிஸ்தான் பவுலர்கள்!
T20 World Cup: வெற்றியில் ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்க, ஆப்கானிஸ்தான் பவுலர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

தென்னாப்பிரிக்க பவுலர் அன்ரிச் நோர்ட்ஜேவின் தனது கேரியர் பெஸ்ட் ஆக 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். 

அதேபோல், முதல் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆப்கானிஸ்தான் அணி, புதுமுக அணியான உகாண்டாவுக்கு எதிராக 183 ரன்கள் எடுத்தது. அதன்பின், 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி.

மற்றொரு புறம், லாங் ஐலேண்டில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா - இலங்கைக்கு இடையிலான ஆட்டத்தில் 3.4 ஓவர்கள் மீதமிருக்கையில், வெற்றி இலக்கான 77 ரன்களைத் தாண்டி, 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வென்றது, தென்னாப்பிரிக்கா அணி.

போட்டி வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சு செயல்திறனில் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவின் 2-21, சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜின் 2-22 மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓட்நீல் பார்ட்மேனின் 1-9 ஆகியவை அடங்கும்.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணி செயல்பட்ட விதம்:

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் மெண்டிஸ் 30 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து இரட்டை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 19.1 ஓவர்களில் ஆல் அவுட்டானது.

இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற தென்னாப்பிரிக்க வீரர் நோர்ட்ஜே கூறுகையில், "நாங்கள் அவர்களை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்டோம். இது ஒரு அப் அண்ட் டவுன் விக்கெட். எனவே ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம். இந்த வகை டிராப்-இன் பிட்ச்கள் பந்துவீசுவது கடினம்" என்றார்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வேரியபிள் பவுன்ஸை தவறாக கணித்து ஆடியது. இலங்கை அணியின் தொடக்க வீரரான பதும் நிஸங்க, பாட்மன் பவுலிங்கில் 3 ரன்கள் எடுத்தபோது, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 11 ரன்களில் கமிந்து மெண்டிஸை, நோர்ட்ஜே வெளியேற்றினார். இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா இரண்டு பந்துகளில் டக் அவுட்டானார். அடுத்த பந்தில் சதீர சமரவிக்ரமவை கோல்டன் டக் அவுட்டாக்கினார், மகாராஜ். இதனால், இலங்கை அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.

100 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்ட ஒரே பேட்ஸ்மேனான சரித் அசலங்கா மற்றும் அஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரையும் தென்னாப்பிரிக்க வீரர் நோர்ட்ஜே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இலங்கை அணி 27 பந்துகளில் 9 ரன்களுக்கு கடைசி 4 விக்கெட்டுகளை இழந்தது.

வரலாற்றில், வழக்கமான பெரிய டி 20 வெற்றிகளை அனுமதிக்காத ஒரு போராட்டமான ஆடுகளத்தில், இலங்கை 100 ரன்களாவது எடுக்கும்.ஆனால், இந்தப்போட்டியில் இயலவில்லை.

இதுதொடர்பாக பேசிய இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா,  ‘’நாங்கள் எங்கள் வலிமை, பந்துவீச்சு ஆகியவற்றுடன் சென்றோம், அதனால்தான் நாங்கள் முதலில் பேட் செய்தோம். உண்மையைச் சொல்வதானால், இங்கு 120 ரன்கள் எடுக்க முயன்றோம்’’ என்றார். 

12,562 ரசிகர்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது ஓவரில் தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது அவுட்டானார். 

குயின்டன் டி காக் 27 பந்துகளில், 20 ரன்கள் எடுத்து 11-வது ஓவரில் ஹசரங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

ஓவருக்கு 4.2 ரன்கள் மட்டுமே என்ற சராசரியில், இந்த போட்டி டி20 உலகக் கோப்பையில் மிகக் குறைந்த ரன் ரேட்டைக் கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த விதம்:

ஆப்கானிஸ்தான் உகாண்டா அணிகள் இடையே நடைபெற்ற டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்ததது, ஆப்கானிஸ்தான் அணி. 

கயானாவின் பிராவிடன்ஸில் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 76 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரான் 70 ரன்களும் எடுத்தனர். இது ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் இழப்புக்கு183 என்ற ரன்களை எடுக்க வைத்தது. 

ஆப்கானிஸ்தான் வீரரான ஃபரூக்கி முதல் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அதன்பின்னரும் தொடர்ந்து. மேலும் டி20 உலகக் கோப்பையில் உகாண்டா நான்காவது மிகக் குறைந்த ஸ்கோரை எட்டியதால், மற்றொரு வாய்ப்பினைத் தவறவிட்டது. 

ஒவ்வொரு இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலும் குர்பாஸ் ஆட்டத்தின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். ஃபரூக்கி வீசிய இரண்டாவது பந்தில் உகாண்டா வீரர் ரோனக் படேல் ஆட்டமிழந்தார்.

டாஸ் வென்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா, முதல் 4 போட்டிகளில் சேஸிங் செய்யும் அணிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால், அவரின் கணிப்பு தோற்றுப்போனது. 

டி20 உலகக் கோப்பையில் உகாண்டாவின் முதல் விக்கெட்டை வீழ்த்த மசாபாவுக்கு 15 வது ஓவர் வரை தேவைப்பட்டது, ஆப்கானிஸ்தானின் தொடக்க கூட்டணியை உடைக்கப்போராடி, கடையில் ஜட்ரானை அவர் வெளியேற்றினார்.

4 முறை பவுண்டரி அடித்து 4 முறை சிக்ஸர்களை விளாசிய குர்பாஸ், 45 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்பீல்டில் டீப்பில் கேட்ச் கொடுத்து ஆப்கானிஸ்தானின் ஸ்கோரை 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் என்று உயர்த்தினார். கடைசி 6 1/2 ஓவர்களில் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால், ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்தது. 

முதல் பவர் பிளேயில் உகாண்டாவுக்கு கிடைத்த அனைத்து வாய்ப்பும் முடிந்துவிட்டது. உகாண்டா பேட்ஸ்மேன்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 183 ரன்கள் என்ற இலக்கை சேஸிங்கில் எட்டமுடியாமல், 16 ஓவர்களில் 58 ரன்களை மட்டுமே எடுத்தது, உகாண்டா அணி. இதன்மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது.

 

 

டி20 உலகக் கோப்பை 2024