KKR vs SRH: மீண்டும் ஷ்ரேயாஸ் கேப்டன்சியில் களமிறங்கும் கொல்கத்தா! கம்மின்ஸ் இருந்தும் சன் ரைசர்ஸில் இருக்கும் பலவீனம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kkr Vs Srh: மீண்டும் ஷ்ரேயாஸ் கேப்டன்சியில் களமிறங்கும் கொல்கத்தா! கம்மின்ஸ் இருந்தும் சன் ரைசர்ஸில் இருக்கும் பலவீனம்

KKR vs SRH: மீண்டும் ஷ்ரேயாஸ் கேப்டன்சியில் களமிறங்கும் கொல்கத்தா! கம்மின்ஸ் இருந்தும் சன் ரைசர்ஸில் இருக்கும் பலவீனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 23, 2024 07:00 AM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை வென்ற வெற்றிகரமான கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் புதிய அணியாக சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்கிறது. பேட்டிங், பவுலிங் என பக்காவான அணியாக சன் ரைசர்ஸ் இருந்தாலும் தரமான ஸ்பின் பவுலர் இல்லாமல் இருப்பது பலவீனமான விஷயமாகவே உள்ளது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (இடது), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வலது)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (இடது), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வலது)

உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார். இவர் முதல் முறையாக ஐபிஎல் போட்டிக்கு கேப்டனாக செயல்படபோவது மட்டுமில்லாமல், டி20 போட்டிகளுக்கும் முதல் தடவையாக தலைமை ஏற்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலம்

ஷரேயாஸ் ஐயர் வருகை, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அணியின் பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது.

பவுலிங்கில் ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இணைந்திருப்பது அணியின் வேகப்பந்து வீச்சுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7வது இடத்தை பிடித்தது. கடைசியாக 2021 சீசனில் இறுதிப்போட்டி வரை தகுதி பெற்று ரன்னர் அப் ஆனது.

சன் ரைசர்ஸ் பலம்

இந்த சீசனில் முற்றிலும் மாறுபட்ட அணியாக சன்ரைசர்ஸ் உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளார். அந்த அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்தவரை அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கால்சன் என டி20 கிரிக்கெட்டில் தங்களது திறமையை நிருபித்த டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள்.

பவுலிங்கில் பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன் என வேகப்பந்து வீச்சில் வலுவாக உள்ளது. ஸ்பின்னராக மயங்க் மார்கண்டே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். பேட்டிங், பவுலிங் என பக்கவான அணியாக இந்த சீசனில் சன் ரைசர்ஸ் களமிறங்க இருக்கிறது.

இருப்பினும் அனுபவம் இல்லாத ஸ்பின் பவுலிங் அணிக்கு பலவீனமான விஷயமாகவே அமைந்துள்ளது. 

கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்த சன் ரைசர்ஸ் முற்றிலும் புதிய அணியாக எழுச்சி பெறும் முனைப்பில் விளையாட உள்ளது.

பிட்ச் நிலவரம்

வழக்கமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஈடன் கார்டன் மைதானம், உலகக் கோப்பை தொடரின்போது ஸ்பின் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. எனவே அதன் தொடர்ச்சியாக ஸ்பினனர்கள் ஜொலிப்பார்கள் எனவும், பந்து மிகவும் மெதுவாக எழும்பும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இரவின் பிற்பகுதியில் பனிப்பொலிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை

இந்த இரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 9 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.